அவதார் படத்தை வைத்து ப்ளாக் மைலா? வாரிசுக்கு எதிராக உதயநிதி செய்த வேலை!

படத்தை வாங்கி வெளியிடும் சினிமா நிறுவனங்களில் ரெட் ஜெயண்ட்  முக்கியமான நிறுவனமாக உள்ளது.

ஒரு வருடத்தில் வெளியாகும் திரைப்படங்களில் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் வெளியிட்ட திரைப்படங்களே அதிக திரைப்படங்களாக உள்ளன. இதன் உரிமையாளராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.

உதயநிதி திரையரங்குகளுக்கும், தயாரிப்பாளருக்கும் பங்குகளை சரியாக பிரித்து தருகிறார் என்பதால் அவருக்கு அதிக படங்கள் வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஆளுங்கட்சி என்பதால்தான் அவருக்கு அதிக படங்கள் கிடைக்கின்றன என்றும் ஒரு வாதம் உள்ளது.

தற்சமயம் துணிவு படத்தை உதயநிதி வாங்கியுள்ளார். துணிவு படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட முயற்சித்து வருகிறார். அதே போல வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாக இருக்கும் அவதார் 2 படத்தையும் உதயநிதி வாங்கியுள்ளார்.

வாரிசு படத்தை வாங்கியுள்ள திரையரங்குகளும் அவதார் 2 படத்தை வெளியிட உள்ளன. அதற்காக அவர்கள் ரெட் ஜெயண்டிடம் பேசும்போது துணிவு படத்தை வாங்கினால்தான் அவதார் 2 வை தருவோம் என ரெட் ஜெயண்ட் தரப்பினர் கூறுவதாக அரசல் புரசலான செய்திகள் வருகின்றன.

எனவே இது குறித்து திரையரங்க முதலாளிகள் வருத்தம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

Refresh