அப்பா மறந்தாலும் புள்ள மறக்கலை!.. விஜயகாந்த் இறப்பிற்கு வந்து கண் கலங்கிய விஜய்!.

Actor Vijay and Vijayakanth : விஜயகாந்த் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக உதவிகளை பெற்ற பிரபலங்களில் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகர் முக்கியமானவர் ஆவார். ஆரம்பகட்டத்தில் உதவி இயக்குனராக சினிமாவில் பணிபுரிந்து வந்த எஸ்.ஏ சந்திரசேகர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இயக்குனராக மாறினார்.

எஸ்.ஏ சந்திரசேகர் சினிமாவில் இயக்குனர் ஆன சம காலகட்டத்தில் அதே தமிழ் சினிமாவில் பெரும் நடிகராக இருந்தவர் விஜயகாந்த். விஜயகாந்தை பொறுத்தவரை அவர் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கக் கூடியவர்.

அந்த வகையில் எஸ்.ஏ சந்திரசேகருக்கும் வாய்ப்பு கொடுத்தார் எஸ்.ஏ சந்திரசேகரும் விஜயகாந்த்தை வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படங்களை எடுத்தார். அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தன அதனை தொடர்ந்து வரிசையாக தனது திரைப்படங்களில் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்குவதற்கு அனுமதி வழங்கினார் விஜயகாந்த்.

vijayakanth
vijayakanth
Social Media Bar

அதேபோல விஜய் தமிழ் சினிமாவிற்கு வந்த பொழுதும் அவரை உயர்த்தி விடுவதற்காக தனது திரைப்படத்திலேயே அவருக்கு தம்பி கதாபாத்திரம் கொடுத்தார் விஜயகாந்த். ஆனால் நேற்று விஜயகாந்த் காலையிலேயே இறந்த செய்தி வெளிவந்த பிறகும் நேற்று காலை 11 மணியளவில் அபுதாபியில் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார் எஸ்.ஏ சந்திரசேகர்.

திரையுலகமே துக்கம் அனுசரித்துக் கொண்டிருக்கும் பொழுது இப்படியான வீடியோவை அவர் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது அதனை தொடர்ந்து நேற்று மதியம் விஜயகாந்தின் இறப்பு குறித்து ஒரு ஆடியோ ஒன்றை பேசி வெளியிட்டு இருந்தார் சந்திரசேகர்.

vijayakanth-vijay
vijayakanth-vijay

இந்த நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விஜய் படப்பிடிப்பில் இருந்ததால் நேற்று அவரால் வர முடியவில்லை, இன்று காலையிலேயே வந்து விஜயகாந்தின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழ துவங்கி விட்டார் விஜய் இந்த புகைப்படங்கள் தற்சமயம் வைரலாகி வருகின்றன.