உன் கதை நல்லா இல்ல தம்பி!.. விஜய்யிடம் சென்று மொக்கை வாங்கிய கார்த்திக் சுப்புராஜ்!.

தமிழில் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பதுதான் ஒரு இயக்குனருக்கு வாழ்க்கையில் முக்கியமான விஷயமாக இருக்கும். இப்போது உள்ள இயக்குனர்களுக்கு அந்த வாய்ப்பு மிக எளிதாகவே கிடைக்கிறது.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் போலவே உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக தமிழ் சினிமாவிற்குள் இயக்குனராக களம் இறங்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அவரது முதல் திரைப்படமான பீட்சா திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Social Media Bar

அதனை தொடர்ந்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜிற்கு ரஜினியை வைத்து படம் எடுப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. ஆனாலும் விஜய்யை வைத்து திரைப்படம் எடுக்க வேண்டும் என்பது கார்த்திக் சுப்புராஜின் நீண்டா நாள் ஆசையாக உள்ளது.

ஏற்கனவே ஒருமுறை விஜய்க்காக ஒரு கதையை எழுதி அதை விஜய்யிடம் கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் விஜய்க்கு அந்த கதை பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து பேட்ட திரைப்படத்திற்கு பிறகு மற்றொரு கதையை அவருக்கு கூறியுள்ளார். ஆனால் அந்த கதையும் கூட விஜய்க்கு பிடிக்கவில்லையாம்.

எனவே விஜய்க்காக வேறு கதை எழுதி கொண்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் அவரை வைத்து படம் இயக்க இருப்பதாகவும் கார்த்திக் சுப்புராஜ் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.