News
வாயை மூடிக் கொண்டு இருப்பது தான் எனக்கு நானே கொடுக்கும் தண்டனை – அஜித்தின் பாதையை தேர்ந்தெடுக்கிறாரா விஜய் தேவரக்கொண்டா..!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா, தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தற்போது ‘ஃபேமிலி ஸ்டார்’ பட ரிலீஸுக்காக காத்திருக்கும் விஜய் தேவரகொண்டா, தொடர்ந்து பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் ஒரு நிகழ்வில் பங்கேற்ற தேவரகொண்டா பேசும் போதே எமோஷனலாகி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா நடித்து சரியான வரவேற்ப்பை பெறாத ‘லைகர்’ திரைப்படம் குறித்து நிகழ்சி ஓன்றில் கேள்வி எழுப்ப, அதற்கு எமோஷனலான ஒரு பதிலளித்துள்ளார்.

ஒரு படம் வெற்றியடைய வேண்டும் என நான் கூறினால் கண்டிப்பாக அது வெற்றி அடையும்… நான் மனதில் தோன்றுவதை பேசுபவன். ஒரு படம் ஹிட் அடிக்கும் என்றால் அதனை நான் பிளாக்பஸ்டர் என கூறுவேன்.ஆனால், லைகர் வெற்றி பெறவில்லை. அதனால் அடுத்து வரக்கூடிய எனது மூன்று படங்கள் குறித்து நான் எதுவும் பேசாமல் இருக்க போகிறேன். எனது வாயை மூடிக்கொண்டு இருக்கப் போகிறேன். எனது படங்கள் எனது வெற்றியை பேசட்டும். இது எனக்கு நானே கொடுக்கும் தண்டனை என்று நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக, அவரது ரசிகர்கள் மனமுடந்ததுடன், விஜய் தேவரைகோண்டாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
