தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனர்களை கூட விட்டுடுவேன்.. ஆனா அனிரூத்தை தூக்கிடுவேன்.. ஓப்பனாக கூறிய விஜய் தேவரக்கொண்டா..!
தெலுங்கு தெலுங்கில் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா தமிழில் படங்களில் நடிக்காமலேயே மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகர் என்று கூறலாம்.
இவர் தமிழில் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர் நடித்த நிறைய திரைப்படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்திருக்கின்றன. இவர் நடித்த கீதா கோவிந்தம் டியர் காம்ரேட் அர்ஜுன் ரெட்டி மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமான திரைப்படங்களாகும்.
சமீபத்தில் கூட ஃபேமிலி ஸ்டார் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார் விஜய் தேவரகொண்டா இதனால் அவருக்கென்று தமிழ்நாட்டிலும் சில ரசிகர்கள் இருந்து வருகின்றனர். பெரும்பாலும் பத்திரிகைக்காரர்களுடன் விஜய் தேவர் கொண்டாவிற்கு அவ்வளவாக செட்டாவது இல்லை.
விஜய் தேவரக்கொண்டா சொன்ன பதில்:
சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட அப்படியான ஒரு சச்சரவு நடந்தது விஜய் தேவரகொண்டாவிடம் அவருக்கு பிடித்த இயக்குனர்களை கேட்கும் பொழுது அவர் வெற்றிமாறன் மாதிரியான ஒரு சில இயக்குனர்களை கூறினார். அப்பொழுது ஏன் அவர்களை மட்டும் கூறுகிறீர்கள் என்று கேட்ட பொழுது அது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
நீங்கள் தான் என்னிடம் எந்த இயக்குனரை உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்கிறீர்கள். ஆனால் அதற்கு நாங்கள் மதித்து பதில் அளிக்கிறோம் பிறகு அதையே நீங்கள் அதை சர்ச்சை ஆக்குகிறீர்கள் என்று கூறினார். பிறகு தமிழ் சினிமாவிலும் சரி தெலுங்கு சினிமாவிலும் சரி சிறப்பான இயக்குனர்கள் எக்கச்சக்கமான பேர் இருக்கிறீர்கள்.
ஆனால் அவர்களையெல்லாம் ஒரு பக்கம் வைத்து என்னிடம் யார் வேண்டும் என்று கேட்டால் எனக்கு ஸ்பெஷலாக ஒரு நபர் இருக்கிறார் அவர் வேறு யாருமில்லை இசையமைப்பாளர் அனிருத் தான் இவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு நான் அனிருதத்தை தூக்கி சென்று விடுவேன் என்று கூறி இருக்கிறார் விஜய் தேவரகொண்டா