1 கோடியை பெற போகும் அதிர்ஷ்ட குடும்பம் யார்!.. விஜய் தேவர்கொண்டா வழங்கவிருக்கும் பரிசு!.
தெலுங்கில் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகராக நடிகர் விஜய் தேவர்கொண்டா இருக்கிறார். இவர் நடித்த சில படங்கள் தமிழ் டப்பிங்கில் வந்ததை அடுத்து இவருக்கு தமிழ் சினிமாவிலும் ஒரு ரசிக குழு உருவானது.
அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானது. தற்சமயம் இவர் குஷி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியான முதல் நாள் முதலே நல்ல வெற்றியை கண்டு வருகிறது.
முதல்நாளே இந்த படம் பெரும் வசூல் சாதனை செய்தது. இதனை தொடர்ந்து மக்களுக்கும் இதை கொண்டு உதவ வேண்டும் என முடிவு செய்துள்ளார் விஜய் தேவர்கொண்டா. இதற்காக 1 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 1 லட்ச ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக ஒரு கூகுள் ஃபார்ம் லிங்க் கொடுத்து அதை பூர்த்தி செய்யுமாறு கூறியுள்ளார் விஜய் தேவர்கொண்டா.