Tamil Cinema News
நடிகர் விஜய் குடும்பத்தில் நித்தியாநந்தா பக்தர்.. சினிமாவுடன் நித்தியாந்ந்தாவுக்கு இருந்த தொடர்பு.. அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர்..!
தொடர்ந்து சினிமா துறை குறித்து நிறைய மறைமுகமான விஷயங்களை பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தனது பேட்டிகளின் வழியாக கூறி வருகிறார்.
அப்படியாக சமீபத்தில் நித்தியானந்தாவிற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் மத்தியிலிருந்த வரவேற்பு குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் பொதுவாகவே ஆன்மீக சாமியார்கள் என்று உருவாகும் பொழுது அவர்களுக்கு பிரபலங்கள் மத்தியில் தான் அதிக வரவேற்பு இருக்கும்.
இப்பொழுது எடுத்துக் கொண்டால் கூட ஈஷா யோகா மையத்தில் பக்தர்களாக இருக்கும் சினிமா நடிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதேபோல நித்தியானந்தாவிற்கும் அதிக பக்தர்கள் இருந்து வந்தனர். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் கூட நித்தியானந்தாவிற்கு பக்தராக இருந்ததாக கூறுகிறார் பத்திரிகையாளர் தமிழக பாண்டியா பாண்டியன்.
அப்பொழுதுதான் நடிகை ரஞ்சிதாவும் சினிமாவில் மிகப்பெரும் பிரபலமாக இருந்தார். ஆனால் சினிமாவில் பிரபலமாக இருந்த பொழுது அவர் நித்தியானந்தாவிற்கு பக்தராக இருக்கவில்லை. பிறகு திருமணம் செய்து சென்ற பிறகுதான் இவருக்கு ஆன்மீக பாதையின் மேல் ஆர்வம் ஏற்பட்டது.
ரஞ்சிதாவின் ஆன்மீக பயணம்:
அதனை தொடர்ந்து நித்தியானந்தாவிற்கு சிஷ்யையாக மாறினார் ரஞ்சிதா இந்த நிலையில் ரஞ்சிதாவின் பெற்றோர் அவரை எப்படியாவது நித்யானந்தா மடத்தில் இருந்து கொண்டு வர வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் அது அவர்களால் முடியவில்லை.
இந்த நிலையில் நித்யானந்தா மடத்தில் ரஞ்சிதாவிற்கு பதவி உயர்வு கிடைத்தது அதன் பிறகுதான் நித்யானந்தா ரகசிய கேமரா மூலமாக பிரச்சனையில் சிக்கினார் என்ற இந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.
இந்த பிரச்சனைகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நித்யானந்தாவை பின்பற்றி வந்தவர்கள் அதை அப்படியே தவிர்த்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.