Connect with us

பஸ் கண்டக்டர் மீது கை வைத்த தளபதி ரசிகர்கள்!.. லத்தியோடு களத்தில் இறங்கிய போலீசார்!.

leo madurai

News

பஸ் கண்டக்டர் மீது கை வைத்த தளபதி ரசிகர்கள்!.. லத்தியோடு களத்தில் இறங்கிய போலீசார்!.

Social Media Bar

Leo movie: சினிமா ரசிகர்களை பொருத்தவரை அவர்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாவதுதான் அவர்களுக்கு கொண்டாட்டமான நாளாகும்.

அந்த வகையில் லியோ படத்தின் வெளியீட்டுக்காக வெகு நாட்களாக காத்திருந்தனர் தளபதியின் ரசிகர்கள். இதனை அடுத்து நேற்று லியோ திரைப்படம் வெளியானது. அதனை கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள்.

பொதுவாக ரசிகர்கள் இப்படி கொண்டாடும் பொழுது அங்கே அத்துமீரல்கள் நடப்பது வழக்கமாகும். இதனால் முன்பே போலீசை அங்கு நிறுத்தி வைத்து விடுவார்கள். ஆனால் மதுரையில் ஒரு திரையரங்கில் போலீசை நிறுத்தாததனால் அங்கு அசம்பாவிதம் நடந்துள்ளது.

leo1
leo1

விஜய்யின் ரசிகர்கள் சிலர் ரோட்டில் சென்றது அராஜகம் செய்துள்ளனர் அங்கு அப்போது வந்த ஒரு பேருந்தை நிறுத்தி பேருந்தில் இருந்த கண்டக்டரை அடித்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த மற்ற பேருந்து ஊழியர்கள் கீழே இறங்கி வந்து சண்டை போட துவங்கியதும் தளபதி ரசிகர்கள் அமைதியாகிவிட்டனர்.

படம் பார்க்க வந்தால் படத்தை மட்டும் பார்க்க வேண்டியதுதானே எதற்கு போக்குவரத்தில் பிரச்சனை செய்கிறீர்கள் என்று ஓட்டுநர்கள் சத்தம் போட துவங்கியுள்ளனர். இந்த நிலையில் செய்தியை அறிந்த மதுரை காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் இருவர் வந்து லத்தையுடன் இறங்கினர்.

அதனை பார்த்தவுடன் தளபதி ரசிகர்கள் அனைவரும் ஒளிந்து விட்டனர் பிறகு போலீசார் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தளபதி ரசிகர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று பலரும் இவர்களை விமர்சித்து வருகின்றனர்.

To Top