News
மூணுல ஒரு பங்கு பணம் கைக்கு வந்திடுச்சு!.. சேட்டிலைட் உரிமத்திலையே சம்பாதித்த கோட் திரைப்படம்!..
விஜய் நடிப்பில் தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் கோட். லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்து வரும் கோட் திரைப்படம் இந்த வருடம் வெளியாகிவிடும் என கூறப்படுகிறது. படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.
படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் வருகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் பெரும் பட்ஜெட் படமாக கோட் இருக்கும் என கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட இந்த படத்தின் பட்ஜெட் 300 கோடி என பேச்சுக்கள் இருக்கின்றன. பொதுவாகவே விஜய் திரைப்படங்களின் படப்பிடிப்பு துவங்கும்போதே அந்த படத்திற்கான சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி உரிமங்கள் விற்பனையாகிவிடும்.

ஆனால் கோட் திரைப்படத்திற்கு மட்டும் இன்னமும் சாட்டிலைட் ரைட்ஸ் விற்காமல் இருந்தது. ஏனெனில் முன்பே சன் டிவி இந்த படத்திற்கான சாட்டிலைட் உரிமத்தை வாங்கியிருந்தது. ஆனால் ஏதோ பிரச்சனை காரணமாக அது படத்தை திரும்ப அளித்துவிட்டது.
இந்த நிலையில் தற்சமயம் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ டிவி நிறுவனம் வாங்கியிருக்கிறதாம். கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய்க்கு இந்த படத்தை ஜீ டிவி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தயாரிப்பு நிறுவனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.
