News
விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பீஸ்ட் குழுவினர் கொண்டாட்டம்
நாளை மறுநாள் பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் பீஸ்ட் திரைப்பட குழுமம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்து தற்சமயம் அதிக எதிர்பார்ப்புடன், வெளியாக இருக்கும் திரைப்படம் பீஸ்ட், நெல்சன் இயக்கும் இந்த திரைப்படமானது வரும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பட குழுவினர் ஏதோ செலபரேஷனுக்கு செல்வது போன்ற வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் விஜய் காரை ஓட்டி கொண்டுள்ளார். காரில் பூஜா ஹெக்தே, நெல்சன் ஏனைய பட குழுவினர் இருப்பது தெரிகிறது. இந்த வீடியோவை நடிகை அபர்ணா தாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். ஏற்கனவே பீஸ்ட் மோடில் இருக்கும் தளபதி ரசிகர்கள் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
