மூணு வருஷம் சினிமாவை விட்டு போன முருகதாஸ்.. விஜய் கைவிட்டதுதான் காரணம்..
தமிழ் சினிமா இயக்குனர்களில் பல நடிகர்களுக்கு பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். விஜயகாந்தை வைத்து அவர் இயக்கிய ரமணா திரைப்படம் இப்போது வரை பலருக்கும் அழுக்காத திரைப்படம் என கூறலாம்.
அப்போது வந்த படங்களிலேயே பெருமளவு பேசப்பட்ட திரைப்படமாக ரமணா இருந்தது. தனது திரைப்படங்களில் எப்போதுமே போராட்ட குணம் கொண்ட கதாநாயகனையும், சமூகத்திற்கு ஆதரவாக அவன் போராடுவது போலவுமே முருகதாஸ் கதாபாத்திரத்தை வடிவமைப்பார்.
அதை ரமணா படத்தில் இருந்து அவர் தொடங்கியுள்ளார். முக்கியமாக நடிகர் விஜய்க்கு சில வெற்றி படங்களை முருகதாஸ் கொடுத்துள்ளார். அதில் முக்கியமான படம் துப்பாக்கி. துப்பாக்கி படத்திற்கு பிறகும் கூட கத்தி படம் ஒரு பெரும் ஹிட் படமாக அமைந்தது.
அதற்கு பிறகு சில படங்கள் இயக்கிய முருகதாஸ் ரஜினியை வைத்து இறுதியாக தர்பார் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை தரவில்லை. அதற்கு பிறகு விஜய் முருகதாஸிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார். என்னை வைத்து ஒரு படத்தை இயக்குங்கள் என்று விஜய் கூறினார்.
அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட்டை விட அதிக தொகை அந்த விஜய் படத்தில் செலவாகும் என்பது போல இருந்தது. எனவே பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என்று நினைத்த சன் பிக்சர்ஸ் முருகதாஸ் அல்லது விஜய் இருவரில் ஒருவர் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியது.
விஜய் கண்டிப்பாக அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார், ஆனால் முருகதாஸும் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த படத்தை கேன்சல் செய்துவிட்டது. ஆனால் அப்பொழுது விஜய்யும் கூட முருகதாஸை கைவிட்டு விட்டார், ஒருவேளை முருகதாஸ் படம் எடுத்தால்தான் நான் நடிப்பேன் என்று விஜய் உறுதியாக இருந்திருந்தால் அப்பொழுது முருகதாஸுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் இருக்காது.
அதனால் தான் இப்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கும் அளவிற்கு முருகதாஸ் வந்துவிட்டார் என்று இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்