Connect with us

லியோ இசை வெளியீட்டு விழா நடக்காததற்கு உதய்ணாதான் காரணமா?.. அட கொடுமையே!..

leo udhayanithi

News

லியோ இசை வெளியீட்டு விழா நடக்காததற்கு உதய்ணாதான் காரணமா?.. அட கொடுமையே!..

Social Media Bar

தற்சமயம் தளபதி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் உள்ளது.  ஏனெனில் இந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி படங்களாக இயக்கி வருகிறார்.

ஏறகனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றியை கொடுத்தது. கிட்டத்தட்ட அதில் விஜய்யின் கதாபாத்திரத்தையே மொத்தமாக மாற்றியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில்தான் லியோ திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

அடுத்த மாதம் லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதன் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டனர். அதற்கான வேலைகள் சென்றுக்கொண்டிருந்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக அங்கு இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல வகையான காரணங்கள் மக்கள் மத்தியில் வலம் வருகிறது. விஜய்யின் அரசியல் வருகைக்கு பயந்து யாரோ இதை செய்துள்ளனர் என்று சிலர் கருதுகின்றனர்.

ஆனால் உதயநிதி இதை செய்திருப்பார், ஏனெனில் அவரது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தின் வெளியீட்டு உரிமத்தை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் சென்னைக்கான வெளியீட்டு உரிமத்தை மட்டுமே ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது. அந்த கோபத்தில்தான் உதயநிதி இதை செய்திருப்பார் என்பது ரசிகர்களின் அணுமானமாக உள்ளது.

ஆனால் உண்மைநிலை என்னவென இன்னும் தெரியவில்லை.

To Top