அப்பா மகன் சர்ச்சைக்கு முடிவு கட்டிய விஜய்!.. இதுதான் காரணமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் இருக்கிறார். சினிமாவிற்கு பிறகு விஜய் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு பலப்பேரிடம் இருந்து வருகிறது. ஆனால் அவரது குடும்ப விவகாரம் தொடர்பாகவும் கூட மக்கள் மத்தியில் சர்ச்சை இருந்து வருகிறது.

அதாவது சினிமாவில் விஜய்யை அறிமுகப்படுத்திய அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகரையே விஜய் தனித்து விட்டார் என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. துப்பாக்கி படம் தயாரிக்கப்பட்ட காலம் முதலே விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
அதற்கு பிறகு அது பெரிதானதால் இருவரும் பிரிந்து விட்டனர். தற்சமயம் எஸ்.ஏ சி தனியாக இன்னொரு வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்சமயம் விஜய் எஸ்.ஏ.சியுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.