News
விஜய்க்கு ரசிகரிடம் இருந்து வந்த மெசேஜ்.. அவரது ஆசையை உடனே நிறைவேற்றிய விஜய்!..
Thalapathy Vijay: லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக விஜய் இருந்து வருகிறார்.
லியோ திரைப்படமே எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு ப்ளான் செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் அதற்குள்ளாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்.

விஜய் தமிழக வெற்றி கழகத்தை துவங்கியது முதல் அவர் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் இறுதி காட்சிகளை படம் பிடிப்பதற்காக தற்சமயம் கேரளாவிற்கு சென்றுள்ளனர் கோட் படக்குழுவினர்.
ரசிகருக்காக விஜய் செய்த செயல்:
அங்கு அலைக்கடலென திரண்டிருக்கும் விஜய் ரசிகர்கள் தினமும் விஜய்யை காண்பதற்காக காத்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் சைலஜ் என்னும் அவருடைய ரசிகர் ஒருவர் விஜய்யை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவர் மாற்று திறனாளி என்பதால் இந்த கூட்டங்களுக்கு நடுவே சென்று அவரால் விஜய்யை பார்க்க முடியாது.
இருந்தாலும் எப்படியாவது விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டுள்ளார். இந்த விஷயத்தை அறிந்த அவரது நண்பர் உடனே விஜய்க்கு ஒரு மெயில் செய்துள்ளார். அந்த மெயிலை பார்த்த விஜய் கண்டிப்பாக அவரை சந்திப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கே சைலஜை வர சொல்லி அவரை சந்தித்திருக்கிறார் தளபதி. தற்சமயம் இந்த புகைப்படங்கள்தான் வைரலாகி வருகின்றன.
