Connect with us

இதுதான் விஜய் கட்சியின் பெயரா!.. ஒரு வழியா முடிவு பண்ணிட்டார் போல தளபதி!..

vijay

News

இதுதான் விஜய் கட்சியின் பெயரா!.. ஒரு வழியா முடிவு பண்ணிட்டார் போல தளபதி!..

Social Media Bar

Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் பெரும் நட்சத்திரங்களில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக தளபதி விஜய் இருந்து வருகிறார். வெகு நாட்களாகவே விஜய்க்கு அரசியலுக்கு வர வேண்டும் என்கிற ஆசை உண்டு. ஆனால் அதற்கான சரியான சமயத்திற்காக அவர் காத்துக்கொண்டுள்ளார் என பேசப்படுகிறது.

வழக்கமாக அரசியலுக்கு வர நினைக்கும் பிரபலங்கள் முதலில் செய்யும் காரியங்கள் திரைப்படங்களில் அரசியல் பேசுவது. அந்த வகையில் விஜய்யும் கத்தி, சர்க்கார் மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து அரசியல் பேச துவங்கினார். அதிலும் சர்க்கார் திரைப்படத்தில் கொஞ்சம் வெளிப்படையாகவே அரசியல் சார்ந்து பேசியிருப்பார்.

vijay
vijay

இந்த நிலையில் இறுதியாக உள்ளாட்சி தேர்தல் நடந்தப்போதே பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேட்சையாக பலரும் தேர்தலில் நின்ற சம்பவமும் நடந்தது. இதனையடுத்து அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் விஜய் கட்சி துவங்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

அதற்கு தகுந்தாற் போல இந்த முறை நேரடியாக நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்குகிறார் விஜய். இதுக்குறித்து சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. அதன்படி இயக்கத்தின் முக்கிய ஆட்களை அழைத்து மீட்டிங் ஒன்றை போட்டார் விஜய். இந்த நிலையில் சத்தமில்லாமல் கட்சிக்கு பெயரை ரிஜிஸ்டர் செய்துவிட்டார் விஜய் எனப் பேச்சுக்கள் வர துவங்கியுள்ளன.

இந்த நிலையில் கட்சிக்கு தமிழர் முன்னேற்ற கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக பரவலாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் இதுக்குறித்து இன்னும் சரியான தகவல்கள் வெளிவரவில்லை.

Articles

parle g
madampatty rangaraj
To Top