Tamil Cinema News
1 லட்சம் அட்வான்ஸ் வாங்கிட்டு ஏமாத்திட்டாங்க.. நன்றி மறந்துட்டாங்க.. விஜய் குறித்து பேசிய தயாரிப்பாளர்.!
நடிகர் விஜய்யை ஆரம்பத்தில் கதாநாயகன் ஆக்குவதற்கு அவரது தந்தை அதிகமாக கஷ்டப்பட்டு வந்தார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் அவரது தயாரிப்பிலேயே விஜய்யை வைத்து திரைப்படங்களை இயக்கி வந்தார்.
ஆனால் அவற்றில் நிறைய திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பு பெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் முதன்முதலாக விஜய்யை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளராக பாலாஜி பிரபு இருக்கிறார். ஒரு லட்ச ரூபாய் சம்பளத்திற்கு விஷ்ணு என்கிற திரைப்படத்தில் விஜயை நடிக்க வைத்தார் பாலாஜி பிரபு.
ஏமாத்திட்டாங்க:
விஷ்ணு திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது அதற்குப் பிறகு நடந்த விஷயங்கள் குறித்து பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதில் அவர் கூறும் பொழுது விஷ்ணு படத்திற்கு பிறகு அடுத்து இன்னொரு படம் விஜய் உடன் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
எனவே அவருக்காக ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் தொகையை எடுத்துக் கொண்டு விஜய் வீட்டிற்கு சென்றேன். அப்பொழுது விஜயின் தாயார் நீங்கள்தான் விஜய் வைத்து படம் தயாரித்த முதல் வெளி தயாரிப்பாளர் எனவே அந்த நன்றியை நாங்கள் மறக்க மாட்டோம் என்று கூறினார். ஒ
ரு லட்ச ரூபாய் அட்வான்ஸையும் பெற்றுக் கொண்டார்கள் ஆனால் ஒன்பது வருடங்களாக எனக்கு அவர்கள் வாய்ப்பே கொடுக்கவில்லை. அதற்கு பிறகு 9 வருடம் கழித்து அந்த பணத்தை மட்டும் திரும்ப கொடுத்தார்கள் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.