Connect with us

எனக்கா எண்ட் கார்டு போடுறீங்க!.. 1 லட்சம் ரசிகர்களை திரட்டும் விஜய்!.. பெரிய சம்பவம் இருக்கு!..

leo vijay

Tamil Cinema News

எனக்கா எண்ட் கார்டு போடுறீங்க!.. 1 லட்சம் ரசிகர்களை திரட்டும் விஜய்!.. பெரிய சம்பவம் இருக்கு!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் திரைப்படங்களை கொடுக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் தமிழ் மக்களிடையே அதிக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட தற்சமயம் தமிழில் உள்ள டாப் நடிகர்களில் ஒருவராக விஜய் இருக்கிறார்.

வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்து நடித்துவரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் விஜய் காம்போவில் வெளியான மாஸ்டர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது.

எனவே அதை தாண்டி லியோ படத்தின் வெற்றி இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்தனர் படக் குழுவினர் ஆனால் எதிர்பாராத விதமாக அந்த இசை வெளியீட்டு விழா தடைப்பட்டது.

இதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தளபதி விஜய் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை ஒன்று கூட்டி பெரும் இசை வெளியீட்டு விழாவை நிகழ்த்த இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

அப்படி நடக்கும் பட்சத்தில் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு அது ஒரு துவக்கமாக இருக்கும். மேலும் தன்னிடம் இருக்கும் ரசிக பட்டாளத்தை வெளி உலகத்திற்கு அவர் வெளிப்படுத்தும் விதமாகவும் அந்த நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Top