News
தளபதி 69 ல நான் சொல்றதுதான் ரூல்ஸ்!.. அரசியலுக்கு வந்ததும் டோட்டலா மாறிய விஜய்..
லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்திற்கு ஏற்கனவே அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது.
படத்தின் கதைப்படி இதில் மொத்தம் இரண்டு விஜய் என்பதால் இந்த படம் குறித்து மக்கள் மத்தியில் நிறைய வரவேற்புகள் இருந்து வருகின்றன. இதனை தொடர்ந்து அடுத்து விஜய் நடிக்க இருக்கும் திரைப்படம்தான் அவரது கடைசி படமாக இருக்கும் என ஒருப்பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
விஜய் எடுத்த முடிவு:
எனவே அந்த படத்திற்கு அதிகமான வரவேற்புகள் இருந்து வருகின்றன. எப்படியும் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே அவரது 69 ஆவது திரைப்படம்தான் பெரும் வசூலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்க உள்ளார். இதனை தயாரிக்க நீ நான் என்று பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு நிற்கின்றனர்.
இந்த நிலையில் யாரும் படத்தை தயாரிக்க வேண்டாம். நானே தயாரித்து கொள்கிறேன் என முடிவெடுத்துள்ளார் நடிகர் விஜய். அரசியலுக்கு வந்த வேகத்திற்கு விஜய் சினிமாவிலும் அரசியலை கற்றுகொண்டாரே என இதுக்குறித்து திரை பிரபலங்கள் பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
