Cinema History
நடிகர்கள் வரிசையில் நின்றும் தோல்வியில் முடிந்த மீனா காதல்!.. எந்த நடிகர் தெரியுமா?
சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் நடிகை மீனா. முதன் முதலாக என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவரது தனிப்பட்ட நடிப்பிற்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது.
தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் மீனா. மீனா மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகை ஆவார்.
அதனால்தான் பெரும்பாலும் மீனா நடிக்கும் திரைப்படங்களில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும். என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிக்கும்போதே மீனாவிற்கு குறைவான வயதே ஆகியிருந்தது.
மீனாவுக்கு வந்த காதல்:
ஆனாலும் சோலையம்மாள் என்கிற அந்த கதாபாத்திரத்தில் அவர் மிக சிறப்பாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகமாக கிசு கிசுக்களில் சிக்காதவரும் மீனாதான்.
ரஜினி, கமல் மாதிரியான பெரும் நடிகர்களுடன் நடிக்கும்போது கூட பெரிதாக கிசு கிசுக்குள் வராமல் தப்பி வந்தார் மீனா. இந்த நிலையில் அவருக்கே காதல் ஏற்பட்ட சம்பவமும் நடந்தது.
டபுள்ஸ் என்கிற திரைப்படத்தில் இவருக்கு நடிகர் பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த படத்திலேயே அவர் பிரபு தேவாவுடன் நெருங்கி நடித்து வந்தார். இந்த நிலையில் இதுக்குறித்து தனது தோழிகளிடம் கூறியுள்ளார் மீனா.
அப்போது அவருடைய தோழிகள் கூறும்போது பிரபு தேவா எல்லா நடிகைகளிடமும் அப்படிதான் நெருங்கி பழகுவார் என கூறியதை அடுத்து நடிகை மீனா அவரை விட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.