என்ன வேணும்னாலும் இனி நான் இருக்கேன்!.. விஜயகாந்த் குடும்பத்திடம் இருந்து பாலாவுக்கு வந்த உதவி!..

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் பாலா. அதற்கு பிறகு அவர் அதிக வரவேற்பை பெறுவதற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிகமாக உதவியது. அதன் மூலமாக பரவலாக பாலாவிற்கு வரவேற்பு வந்தது.

விஜய் டிவிக்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே பாலா அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு எல்லாம் நிறைய உதவிகளை செய்து வந்தார். ஒருமுறை அவருக்கு விஜய் டிவியில் பரிசாக குளிர்சாதன பெட்டி கிடைத்தப்போது அதை அப்படியே அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்தார் பாலா.

இந்த நிலையில் வெகு தாமதமாகதான் பாலா பலருக்கும் இப்படி உதவி வருகிறார் என்பது தெரிய துவங்கியது. அதற்கு பிறகு இப்போதெல்லாம் மிகவும் வெளிப்படையாகவே அவர் மக்களுக்கு நன்மைகளை செய்து வருகிறார்.

bala
bala
Social Media Bar

சில இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி தந்துள்ளார். இலவச ஆட்டோ சேவை முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸோடு இணைந்து பள்ளியில் கழிப்பிட வசதி சரியில்லை என கூறி அதை சரி செய்ய நன்கொடை வழங்கினார்.

இப்படியாக பல நன்மைகளை செய்து வருகிறார் பாலா. இந்த நிலையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்துக்கொண்ட நிகழ்வில் பேசிய பாலா நான் இவ்வளவு நன்மைகளை செய்வதற்கு விதை போட்டவரே கேப்டன் தான்.

அவரை போலவே அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என நினைத்தேன் என கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த விஜய பிரபாகரன் கூறும்போது எனது அப்பா பெயரை சொல்லி மனதை தொட்டு விட்டீர்கள். உங்களுக்கு எந்த விதமான உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். உங்களுக்கு உதவ காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.