Connect with us

சூப்பர் ஸ்டார்னா அது ரஜினி மட்டும்தான்!.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!..

Tamil Cinema News

சூப்பர் ஸ்டார்னா அது ரஜினி மட்டும்தான்!.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!..

Social Media Bar

Leo Success Meet: தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை கண்டு வருகிறது லியோ திரைப்படம். இதற்கு முன்பு வெளியான வாரிசு பீஸ்ட் போன்ற திரைப்படங்களை விட லியோ அதிக வசூலை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் லோகேஷ் கனகராஜ் இணைந்து திரைப்படம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர் படக் குழுவினர். ஏனெனில் படத்திற்கு இசை வெளியீட்டு விழாவும் நிகழ்த்தப்படவில்லை என்பதால் ஒரு விழாவை நடத்துவோம் என்று முடிவு செய்து நேற்று சென்னையில் லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.

leo
leo

அதில் பேசிய விஜய் வெகுகாலமாக சர்ச்சையில் இருந்த ஒரு விஷயத்திற்கு முடிவு கட்டியுள்ளார். அதாவது ரஜினிக்கும் விஜய்க்குமான போட்டி வெகு நாட்களாக இருந்து வந்தது. வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசும்பொழுது விஜய்தான் அடுத்த ரஜினி என பேசியிருந்தார். அங்குதான் பிரச்சனை துவங்கியது.

அதற்கு பலி வாங்கும் விதமாக ரஜினி ஜெயிலர் விழாவில் பேசும்பொழுது என்னதான் காக்கா அதிக உயரம் பறந்தாலும் அதனால் கழுகாக ஆக முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். விஜய்யைதான் ரஜினி அப்படி குறிப்பிடுகிறார் என பேச்சுக்கள் இருந்தன.

இந்த நிலையில் தற்சமயம் லியோ வெற்றி விழாவில் பேசிய விஜய் மக்கள் திலகம் என்றால் அது ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் அதே மாதிரி சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த பிரச்சனை ஒரு முடிவை கண்டுள்ளது.

To Top