விஜய்யை மறைமுகமாக கலாய்த்த அஜித்.. குட் பேட் அக்லி ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா.!
நடிகர் அஜித் நடிப்பில் அடுத்தவரை இருக்கும் குட் பேட் ஆக்லி திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான ஈடுபாடுகள் இருந்து வருகிறது படத்தின் டிரைலர் வெளியானது முதலே அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
அஜித்திற்கு ஒரு ஃபேன் பாய் திரைப்படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அஜித்தின் மிகப்பெரிய ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் பழைய அஜித் திரைப்படங்களில் இருந்த முக்கியமான விஷயங்களையும் வசனங்களையும் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பது தெரிகிறது.

அதனால் திரையரங்குகளில் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இந்த திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறைய கலாய் வசனங்களும் ட்ரெண்டிங்கில் இருக்கும். வசனங்களும் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் விஜய் குறித்த சில வசனங்களும் படத்தில் இருப்பதாக இப்பொழுது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி வாட் ப்ரோ இட்ஸ் வெரி ராங் ப்ரோ என்று ஒரு மேடையில் விஜய் பேசிய அந்த வசனமும் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே விஜய்யை கலாய்க்கும் விதமாக காட்சிகள் இந்த படத்தில் இருக்குமா என்று இப்பொழுது கேள்விகள் எழுந்து வருகின்றன.