நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அது குறித்த விஷயங்கள்தான் அதிகமாக அரசியலிலும் சினிமாவிலும் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் மற்ற கட்சிகளில் இருக்கும் இளைஞர்கள் கூட விஜய்யின் கட்சிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் தற்சமயம் அதிகரித்திருக்கிறது.
அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடந்த மாநாடு இருந்தது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடிக்கான விளக்கத்தை மாநாட்டில் கூறுவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் விக்கிரவாண்டியில் சமீபத்தில் விஜய் கட்சிக்கான மாநாடு நடந்தது அந்த மாநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதன் மூலமாக விஜய்க்கு தமிழ்நாட்டில எவ்வளவு பெரிய செல்வாக்கு இருக்கிறது என்பது அரசியல் கட்சிகளுக்கு புரிய துவங்கியிருக்கிறது.

மாறிய சீமான்:
முக்கியமாக தமிழ்நாட்டில் தற்சமயம் முக்கிய கட்சியாக கால் பதித்து வரும் நாம் தமிழர் கட்சி மாதிரியான கட்சிகளில் இளைஞர்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள் விஜயின் கட்சி பக்கம் செல்லும் பட்சத்தில் அது நாம் தமிழர் கட்சிக்கு பெரிய இழப்பாக அமையும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் ஆரம்பம் முதலே தமிழர் இல்லை என்று கூறி ரஜினிகாந்தை அதிகமாக விமர்சித்து வந்தார் சீமான். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்கிற பொழுது கூட ரஜினியை எதிர்த்து பேசியிருந்தார் சீமான். ஆனால் சமீபத்தில் வேட்டையன் திரைப்படம் வந்த பொழுது ரஜினியை பாராட்டி அவர் பேசியிருந்தார்.
இந்த மாதிரியான சமூக நீதி படங்களில் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் சீமான் ரஜினியை சந்தித்து நேரில் பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து ரஜினியோடு ஆதரவாக பேசுவதன் மூலமாக ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுக்க நினைக்கிறார் சீமான் என்று பேச்சுக்கள் எழ துவங்கி இருக்கின்றன.
இதன் மூலம் விஜய்க்கு எதிராக ஒரு கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவாக முடியும் என்றும் பேசப்படுகிறது






