Latest News
சூர்யாவுக்கு வில்லனாக விஜய் சேதுபதி.. அதுக்குள்ள சபதத்தை கை விட்டுட்டாரே..!
கங்குவா திரைப்படத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு சூர்யா தொடர்ந்து நடிக்கும் திரைப்படங்களின் கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அடுத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த திரைப்படம் கண்டிப்பாக அவருக்கு வெற்றியை பெற்று தரும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பெரும்பாலும் வெற்றியைதான் கொடுத்திருக்கின்றன என்பதால் இந்த திரைப்படம் சூர்யாவிற்கு நல்ல வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி நடிக்க போவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி நிறைய திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். நிறைய பேருக்கு பழக்கத்தின் காரணமாக நடித்தும் கொடுத்திருக்கிறார்.
களம் இறங்கும் விஜய் சேதுபதி:
ஆனால் சமீபத்தில் அவர்கள் பேட்டியில் கூறும்பொழுது இனி வில்லனாகவும் நடிக்க மாட்டேன், பழக்கத்திற்காகவும் நடித்துக் கொடுக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். அப்படி இருக்கும் பொழுது சூர்யாவுடன் இப்பொழுது சேர்ந்து நடிக்கிறாரே என்கிற கேள்வி பலருக்கும் இருந்தது.
ஆனால் இது குறித்து சினிமா வட்டாரத்தினர் கூறும் பொழுது இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சூர்யாவிற்கு நண்பனாக நடிப்பதாகவும் இது விடுதலை மாதிரி ஒரு இரட்டை கதாநாயகன் கதை என்றும் கூறுகின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெரும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களை ஆர்.ஜே பாலாஜி எப்படி கையாள போகிறார் என்பதும் ஒரு கேள்வியாக இருக்கிறது.