Latest News
சிவகார்த்திகேயனுடன் கூட்டணி.. செலக்ஷனில் மாற்றத்தை கொண்டு வந்த ஜெயம் ரவி..!
நடிகர் ஜெயம் ரவிக்கு வெகு வருடங்களாகவே ஒரு நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படம் என்று ஒரு திரைப்படம் கிடைக்கவே இல்லை.
பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தாலும் கூட அதே நிறைய நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் என்பதால் ஜெயம் ரவியின் வெற்றி படம் என்று அதை கூற முடியாது.
இந்த நிலையில் ஜெயம் ரவி தொடர்ந்து புது கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார். எனவே விவாகரத்துக்கு பிறகு அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் கதையையும் அலசி ஆராய்ந்து நடித்து வருகிறார்.
புது கூட்டணி:
மேலும் தொடர்ந்து இப்பொழுது பிரபலமாக இருக்கும் இயக்குனர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே வெற்றிமாறனிடம் தன்னை வைத்து ஒரு படம் பண்ணும்படி கேட்டு இருக்கிறார்.
வெற்றிமாறனும் அதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார். இதேபோல நிறைய இயக்குனர்களிடம் பேசி வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி சேர்ந்து நடிக்க போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
முக்கியமாக ஜெயம் ரவி அந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக சினிமாவில் களமிறங்கிய பொழுது அது அவருக்கு அது பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. அதே மாதிரியான வரவேற்பை ஜெயம் ரவியும் பெற நினைக்கிறார் என்று கூறப்படுகிறது.