Connect with us

பேமண்ட் விஷயத்தில் என்னவெல்லாம் கூத்து நடக்குது தெரியுமா?.. விஜய் சேதுபதி வாயை கிளறிய பத்திரிக்கையாளர்..

vijay sethupathi

News

பேமண்ட் விஷயத்தில் என்னவெல்லாம் கூத்து நடக்குது தெரியுமா?.. விஜய் சேதுபதி வாயை கிளறிய பத்திரிக்கையாளர்..

Social Media Bar

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷிற்கு பிறகு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராக நடிகர் விஜய் சேதுபதி இருந்து வருகிறார். விஜய் சேதுபதி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான காலகட்டம் முதலே அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதைகளமும் ஒவ்வொரு மாதிரி இருப்பதை பார்க்க முடியும்.

முதன்முதலாக தென்மேற்கு பருவக்காற்று என்கிற திரைப்படம் மூலமாகதான் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. அந்த திரைப்படத்தின் கதை அம்சமே பலருக்கும் பிடித்த வகையில்தான் இருந்தது. அதற்குப் பிறகு அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா சூது கவ்வும் என்று ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு வகையான கதை அமைப்பை கொண்டிருந்தன.

விஜய் சேதுபதி படங்கள்:

அதற்கு ஒவ்வொரு வகையிலும் தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. அதை மிகவும் சிறப்பாக செய்திருந்தார் விஜய் சேதுபதி அதன் மூலமாகதான் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற துவங்கினார்.

பொதுவாக கதாநாயகனாக நடிக்கும் நடிகர்கள் வேறு எந்த திரைப்படத்திலும் சின்ன கதாபாத்திரத்திலோ அல்லது வில்லனாகவோ நடிக்க மாட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதி அதிலிருந்து மாற்றமான ஒரு நடிகராக இருந்தார். சில படங்களில் வில்லனாக நடித்தும் அசத்தியிருக்கிறார.

 அதேபோல சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் தற்சமயம் விஜய் சேதுபதியிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி ஒன்றும் அதற்கு விஜய் சேதுபதி அளித்த பதிலும் அதிக வைரலாகி வருகிறது.

பத்திரிக்கையாளர் கேள்வி:

அந்த பத்திரிகையாளர் விஜய் சேதுபதியிடம் இதுவரை நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறீர்கள். 200 கோடி ஆயிரம் கோடி என்றெல்லாம் பணத்தை பார்த்திருப்பீர்கள். படம் தோல்வியடையும் பொழுது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று கேட்டிருந்தனர்.

அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி நீங்கள் நினைக்கும் அளவிற்கு எல்லாம் நான் பணம் வாங்குவதில்லை. தேவையில்லாமல் என் வாயை கிளராதீர்கள் நிறைய இடங்களில் எனக்கு வர வேண்டிய பணம் இன்னும் வரவில்லை.

நிலுவையில் உள்ள பணம் எவ்வளவு இருக்கு என்று கூறினாலே உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நிறைய திரைப்படங்களில் காசே வாங்காமல் எல்லாம் நடித்துக் கொடுத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி. அதேபோல இன்னொரு பேட்டியில் அவர் கூறும்போது இனிமேல் எந்த ஒரு திரைப்படத்திலும் வில்லனாகவோ அல்லது சின்ன கதாபாத்திரத்தில் ஒரு நடித்துக் கொடுப்பது கிடையாது என்று முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

ஏனெனில் அப்படி நடித்துக் கொடுப்பதன் மூலமாக தன்னை தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும் வெளிபடையாகவே கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.

To Top