News
விஜய் சேதுபதியும், மிஸ்கினும் – வைரலான பிசாசு 2 போட்டோ
இயக்குனர் மிஸ்கின் திரைப்படத்தில் ஹிட் கொடுத்த முக்கியமான திரைப்படம் பிசாசு. மிஸ்கின் தனக்கென ஒரு திரைக்கதை பாணியை கொண்டிருப்பவர். அந்த பாணிக்கு ஒத்து போகும் ஒரு படமாக பிசாசு இருந்தது.

இந்த படத்தில் நாகா, ப்ரயகா மார்ட்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை அடுத்து மிஸ்கின் பிசாசு படத்தின் அடுத்த பாகமாக பிசாசு 2 திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த படமும் இயக்குனர் மிஸ்கினுக்கு ஒரு முக்கியமான வெற்றி படமாக அமையலாம் என திரை வட்டாரத்தில் பேச்சுக்கள் உள்ளன. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

ஏற்கனவே பீட்சா என்கிற பேய் படமே தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதன் பிறகு அவர் எந்த பேய் படமும் நடிக்கவில்லை. இந்த படத்தில் நாம் மீண்டும் பீட்சா பட விஜய் சேதுபதியை எதிர்ப்பார்க்கலாம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
மேலும் அடுத்து மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். எப்படி இருந்தாலும் பிசாசு 2 வில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
