Connect with us

என் பையனை விட அந்த பொண்ணுக்கு 5 வயசுதான்.. அதுக்கூட போய் எப்படி?.. இயக்குனர் செயலால் அதிர்ச்சியடைந்த விஜய் சேதுபதி..

vijay sethupathi 1

News

என் பையனை விட அந்த பொண்ணுக்கு 5 வயசுதான்.. அதுக்கூட போய் எப்படி?.. இயக்குனர் செயலால் அதிர்ச்சியடைந்த விஜய் சேதுபதி..

Social Media Bar

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து நிறைய சிறப்பான திரைப்படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

பெரும்பாலும் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களில் அவருக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்கள் மீது மிகுந்த கவனம் செலுத்த கூடியவர். ஆரம்பத்தில் நிறைய திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்து வந்துள்ளார்.

விஜய் சேதுபதி கதாபாத்திரம்:

ஆனால் இப்போது வில்லன் கதாபாத்திரத்திற்குதான் ஹீரோ கதாபாத்திரத்தை விடவும் வரவேற்பு அதிகமாக இருப்பது விஜய் சேதுபதிக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே போனால் வில்லன் நடிகனாக நம்மை மாற்றிவிடுவார்கள் என யோசித்த விஜய் சேதுபதி இனி வில்லனாக நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சினிமாவில் அவருக்கு நடந்த அனுபவம் ஒன்றை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். டி.எஸ்.பி திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வந்தப்போது அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் விஜய் சேதுபதி அதற்கு கடுமையாக மறுப்பு தெரிவித்திருந்தார். ஏனெனில் கீர்த்தி ஷெட்டி ஆரம்பக்காலக்கட்டங்களில் நடித்த உப்பன்னா திரைப்படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

நடிகையுடன் நடிக்க மறுக்க காரணம்:

ஆனால் சினிமாவில் அப்பாவாக நடிக்கும் நடிகர்கள் ஜோடியாக நடிப்பது சகஜம்தானே என கேட்டபோது அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி படப்பிடிப்பின் இறுதி நாட்களில் பெரிய வசனம் ஒன்றை கீர்த்தி ஷெட்டிக்கு வைத்திருந்தனர்.

அதை பேசுவதற்கு மிகவும் பயத்தில் இருந்தார் கீர்த்தி ஷெட்டி. அப்போது அவரை அழைத்து என் மகனை விட ஒரு 5 வயசுதான் உனக்கு அதிகமா இருக்கும். என்னை உன் அப்பாவா நினைச்சுக்கிட்டு தைரியமா பேசு என அட்வைஸ் கொடுத்தேன்.

இப்ப நானே அந்த பொண்ணோட எப்படி ரொமான்ஸ் பண்ணி நடிக்க முடியும். அப்படி நடிக்கணும் நாலும் அதை மன ரீதியா ஒத்துக்க கொஞ்சம் காலம் ஆகும். அதுனாலதான் அந்த படத்துல கீர்த்தி ஷெட்டியை வைக்கலை என்கிறார் விஜய் சேதுபதி.

To Top