Connect with us

எனக்கு இந்த கதையே பிடிக்கலையேடா! – விஜய் சேதுபதி பிடிக்காமல் நடித்து கடைசியில் ஹிட் கொடுத்த திரைப்படம்! எது தெரியுமா?

Cinema History

எனக்கு இந்த கதையே பிடிக்கலையேடா! – விஜய் சேதுபதி பிடிக்காமல் நடித்து கடைசியில் ஹிட் கொடுத்த திரைப்படம்! எது தெரியுமா?

Social Media Bar

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. எப்போதும் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் சில சமயங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

மாஸ்டர் விக்ரம் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்த வில்லன் பாத்திரம் வெகுவாக பேசப்பட்டது, அதை தொடர்ந்து வரிசையாக வில்லனாக நடிப்பதற்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி சினிமாவில் இப்படியான ஒரு உயரத்தை தொடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது அவர் கதையை தேர்ந்தெடுக்கும் முறைதான்.

ஒவ்வொரு கதையையும் மக்களிடம் இந்த கதை வெற்றி பெறுமா? என்று ஆலோசித்த தேர்ந்தெடுப்பவர் விஜய் சேதுபதி. ஆனால் விஜய் சேதுபதியே தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறிய ஒரு கதை அவர் நடித்து ஹிட் அடித்த சம்பவமும் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் நானும் ரெளடிதான் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கினார். ஆரம்பத்தில் இந்த படத்தின் கதையை விஜய் சேதுபதியிடம் கூறியபோது இந்த கதை எனக்கு அவ்வளவா பிடிக்கலை. நீ வேற ஹீரோவிடம் கூறு என கூறிவிட்டார்.

ஆனால் படத்தில் கதாநாயகனுக்கு ஆக்‌ஷன் காட்சிகளே இல்லை என்பதால் மற்ற நட்சத்திரங்களும் இந்த கதையில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியிடமே வந்த விக்னேஷ் சிவன் யாருமே இந்த கதையை ஒப்புக்கொள்ளவில்லை என கூறியுள்ளார். சரி அப்படியென்றால் நானே நடிக்கிறேன் என வேண்டா வெறுப்பாக அந்த படத்தில் நடித்து கொடுத்தார் விஜய் சேதுபதி.

ஆனால் படம் வெளியான பிறகு பெரும் ஹிட் கொடுத்தது நானும் ரெளடிதான் திரைப்படம். சொல்லப்போனால் அதற்கு பிறகு விக்னேஷ் சிவனுக்கு அப்படியொரு ஹிட் படம் அமையவே இல்லை.

To Top