சிங்கம் புலிக்கிட்ட இதை மட்டும் பண்ணீடாத.. விஜய் சேதுபதி பண்ணுனதை மறக்க மாட்டேன் – சிங்கம் புலி

விஜய் சேதுபதி ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சக நடிகர்களுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்கக் கூடியவர் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களில் நல்ல திரைகதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் விஜய் சேதுபதி.

அதில் சில திரைப்படங்கள் தோல்வியை கண்டாலும் கூட பெரும்பாலும் அவரது திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும். இந்த நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா திரைப்படம் வெளியாகி அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்று கூறலாம்.

மகாராஜா படம்:

மேலும் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு படமாக மகாராஜா திரைப்படம் இருந்தது. மகாராஜா திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் சிங்கம் புலி நடித்திருக்கிறார். இயக்குனர் சிங்கம் புலி விஜய் சேதுபதி குறித்து ஒரு பேட்டியில் பேசும் பொழுது சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

vijay sethupathi maharaja
vijay sethupathi maharaja
Social Media Bar

விஜய் சேதுபதி சிங்கம் புலியை இந்த படத்திற்கு நடிக்க கூப்பிட்ட பொழுது அவருக்கான அனைத்து தேவைகளையும் செய்து வைத்து விட்டாராம்  சிங்கம் புலியை மூன்று நாட்களுக்கு கும்பகோணத்திற்கு அழைத்துச் சென்று விட்டு திரும்ப அழைத்து வர வேண்டிய சூழல் இருந்தது.

அப்பொழுது விஜய் சேதுபதி அவருடைய டிரைவரை அழைத்து கேரவனில் நன்றாக படுத்து உறங்கி விட்டு பிறகு சிங்கம்புலி அண்ணனை அழைத்துக்கொண்டு கும்பகோணம் போ என்று கூறி டிரைவருக்கு கேரவனில் ரெஸ்ட் எடுக்க அனுமதி கொடுத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி:

பிறகு வந்த டிரைவர் சிங்கம்புலியை அழைத்துக்கொண்டு செல்லும் பொழுது வழியில் இருவரும் டீ கொடுத்து இருக்கின்றனர். அப்பொழுது சிங்கம்புலி அதற்கு பணம் கொடுக்க வர அதை டிரைவர் தடுத்துவிட்டார்.

vijay sethupathi maharaja
vijay sethupathi maharaja

இந்த மூன்று நாட்களுக்கு நீங்கள் எந்த செலவும் செய்யக்கூடாது என்று விஜய் சேதுபதி அண்ணா கூறியிருக்கிறார் அதற்கான எனக்கு 40 ஆயிரம் ரூபாய் கையில் கொடுத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார் டிரைவர். இந்த விஷயத்தைப் பகிரும் சிங்கம் புலி கூறும் பொழுது ஒரு நடிகர் என்பதையும் தாண்டி விஜய் சேதுபதி எங்களுக்கு இவ்வளவு விஷயங்களை செய்யக்கூடியவர் என்று கூறியிருக்கிறார்.