Connect with us

உனக்கு அறிவு இருக்கா இல்லையா?.. மகனால் கடுப்பான விஜய் சேதுபதி.. ஒரு அளவுக்குதான் பொறுமை எல்லாம்.!

vijay sethupathy son

Tamil Cinema News

உனக்கு அறிவு இருக்கா இல்லையா?.. மகனால் கடுப்பான விஜய் சேதுபதி.. ஒரு அளவுக்குதான் பொறுமை எல்லாம்.!

Social Media Bar

Vijay Sethupathi’s son Surya has been one of the most criticized actors in Tamil cinema.

வாரிசு நடிகர்களில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒரு நடிகராக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இருந்து வருகிறார்.

விஜய் சேதுபதியின் மகனான சூர்யா தற்சமயம் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பெற்று ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் திரைப்படத்தில் நடிக்க துவங்கியதில் இருந்து இவர் பேசும் விஷயங்கள் எல்லாம் தொடர்ந்து அதிக சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.

இவர் சினிமாவில் அறிமுகமானதுமே பத்திரிகையாளர்களிடம் பேசும் பொழுது விஜய் சேதுபதியின் மகனாக என்னை நான் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் திரைப்படத்தில் கூட சூர்யா விஜய் சேதுபதி என்று போடவில்லை.

விஜய் சேதுபதி மகன்:

vijay sethupathi son

vijay sethupathi son

வெறும் சூர்யா என்று தான் போட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஆனால் விஜய் சேதுபதியின் மகன் என்பதால்தான் இவருக்கு முதலில் சினிமாவில் வாய்ப்புகளே கிடைத்திருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது இவர் எப்படி அந்த அடையாளம் இல்லாமல் சினிமாவிற்கு வந்ததாக கூறலாம் என்று ஒரு பக்கம் கேள்வியை எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதற்கு நடுவே இன்னொரு பேட்டியில் பேசும் பொழுது எனக்கு செலவுக்கு எங்க அப்பா ஒரு நாளைக்கு 500 ரூபாய்தான் தருவார். மிகவும் கஷ்டப்பட்டுதான் வளர்ந்தேன் என்று கூறியிருந்தார் சூர்யா. ஏழை எளிய மக்களின் ஒரு நாள் சம்பளமே ஐநூறு ரூபாய் தான் என்று இருக்கும் பொழுது அதை பாக்கெட் மணியாக வாங்கிவிட்டு கஷ்டப்படுகிறேன் என்று கூறுகிறாரே என்று இது குறித்து நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் அப்போது வந்தன.

இந்த நிலையில் தற்சமயம் விஜய் சேதுபதி இதற்காக சூர்யாவை அதிகமாக திட்டியதாக கூறப்படுகிறது. எனவே இனி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் எங்கேயும் பேசக்கூடாது என்று விஜய் சேதுபதி கண்டிப்பாக கூறி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. எனவே இனியாவது சூர்யா இந்த மாதிரி பேசாமல் இருப்பாரா என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

To Top