Tamil Cinema News
வட சென்னைல நான் நடிக்க வேண்டியது.. பறிபோன 3 வாய்ப்புகள். மனசு கஷ்டப்பட்டுறப்பேன்.. விஜய் சேதுபதி ஓப்பன் டாக்
பெரும்பாலும் அரசியல் சார்ந்த விஷயங்களை தனது திரைப்படங்களில் காட்டும் சர்ச்சையான இயக்குனர்கள் படங்களில் நடிகர்கள் நடிக்க மாட்டார்கள். ஆனால் அதிலிருந்து மாறுபட்டவர் இயக்குனர் வெற்றிமாறன்.
இயக்குனர் வெற்றிமாறன் என்னதான் நிறைய விஷயங்களை தன் திரைப்படத்தில் பேசினாலும் அவரது திரைப்படத்தில் நடிப்பதற்கு நிறைய நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முக்கியமாக தெலுங்கு சினிமாவில் நிறைய நடிகர்கள் வெற்றிமாறன் படத்தில் நடிப்பதற்கு காத்திருக்கின்றனர் அப்படியாக தமிழ் சினிமாவிலும் காத்திருந்தவர்தான் நடிகர் விஜய் சேதுபதி.
இது குறித்து தனது பேட்டியில் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார் ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது வெற்றிமாறன் திரைப்படங்களில் நான் வாய்ப்பு கேட்டு இருக்கிறேன்.
விஜய் சேதுபதி கேட்ட வாய்ப்பு:
வெற்றிமாறனின் முதல் திரைப்படமான பொல்லாதவன் திரைப்படத்தின் போது நான் அங்கு சென்று வாய்ப்பு கேட்டு சென்றேன். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு பிறகு ஆடுகளம் திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுதும் நான் வாய்ப்பு கேட்டேன்.
ஆனால் வெற்றி மாறன் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. பிறகு நான் வெகு காலங்கள் கழித்து பெரிய நடிகராக மாறிய பிறகும் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் இருந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில் வடசென்னை திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு வந்தது. என்னை நேரில் அழைத்து வெற்றிமாறன் படத்தின் கதையை கூறினார். ஆனால் அந்த சமயத்தில் ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
இந்த நிலையில்தான் விடுதலை 2 திரைப்படத்தில் எட்டு நாட்கள் மட்டும் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சரி என்று நானும் நடிப்பதற்கு சென்றேன். ஆனால் அதற்குப் பிறகு அந்த படத்தில் முழுமையாக நடிக்க வேண்டியதாக இருந்தது.
ஒருவேளை எட்டு நாளில் என்னை அவர் வீட்டுக்கு அனுப்பி இருந்தால் நான் மிகவும் வருத்தப்பட்டு இருப்பேன் என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.