News
அந்த நிகழ்ச்சியை விட இதுதான் சிறப்பா இருக்கு!.. விஜய் டிவிக்கு வந்து சன் டிவி நிகழ்ச்சியை பற்றி பேசிய விஜய் சேதுபதி..!
தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவரின் நடிகர் விஜய் சேதுபதி. பெரும்பாலும் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு என்பது அதிகமாகதான் இருந்து வருகிறது.
அதற்கு தகுந்தார்போல விஜய் சேதுபதியும் தொடர்ந்து நிறைய புதிய கதாபாத்திரங்களை எடுத்து நடித்து வருகிறார். வழக்கம் போல ஒரே கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்காமல் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரமாக வருகிறார் விஜய் சேதுபதி.

உதாரணத்திற்கு விடுதலை திரைப்படத்தில் போராளியாக வந்த விஜய் சேதுபதி தற்சமயம் வெளியாகி இருக்கும் மகாராஜா திரைப்படத்தில் ஒரு சலூன் கடை வைத்திருக்கும் சாதாரண நபராக நடித்திருக்கிறார். இப்படி தொடர்ந்து பல கதாபாத்திரங்களில் மாறி மாறி நடித்தாலும் கூட விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிக்கும்போது தான் அதிக வரவேற்புகள் கிடைக்கிறது.
வில்லன் கதாபாத்திரங்களுக்கு வரவேற்பு:
விக்ரம் மற்றும் மாஸ்டர் இரண்டு திரைப்படங்களுமே அதிக வரவேற்பை அவருக்கு பெற்றுக் கொடுத்தன. முக்கியமாக விக்ரம் திரைப்படத்தில் வந்த சந்தானம் என்கிற அவரது கதாபாத்திரத்திற்கு அதிகமாகவே வரவேற்புகள் கிடைத்தது.
இதனை தொடர்ந்து மகாராஜா திரைப்படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி தன்னுடைய படத்தின் ப்ரமோஷனுக்காக நிறைய வேலைகளை செய்து வந்தார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் சென்றிருந்தார்.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்.ஜே பாலாஜி மாதிரியான நடிகர்கள் ஏற்கனவே தங்கள் திரைப்படத்தை ப்ரமோஷன் செய்திருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியும் அந்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். அங்கு சென்ற பொழுது அதில் பேசிய அவர் இந்த நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக இருக்கிறது.
சன் டிவியை விட நல்லாயிருக்கு:
மிகவும் ஜாலியாக இருக்கிறது இதற்கு முன்பு ஒரு சமையல் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினேன். ஆனால் அந்த நிகழ்ச்சி இப்படி கலகலப்பாக இருக்காது அது முழுக்க முழுக்க சீரியஸ் ஆன ஒரு நிகழ்ச்சி அதைவிட இந்த நிகழ்ச்சிதான் சிறப்பாக இருக்கிறது என்று கூறியிருந்தார் விஜய் சேதுபதி.
இதற்கு முன்பு மாஸ்டர் செஃப் இந்தியா என்கிற நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பானது. அதை தொகுத்து விஜய் சேதுபதிதான் வழங்கினார் எனவே அந்த நிகழ்ச்சியைதான் அவர் கூறுகிறார் என்று கூறப்படுகிறது.
