News
பொண்டாட்டிக்கே பயப்படலை.. சினிமாவுக்கு எதுக்கு பயப்படணும்… விஜய் சேதுபதி பதிலால் ஆடிப்போன வடக்கன்ஸ்!.
Vijay sethupathi: தமிழ் சினிமாவில் வித்தியாசமாக நடிப்பை காட்டி தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நடிகராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார். சாதாரணமான சண்டை போடும் கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் தொடர்ந்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த வருகிறார்.
ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலமாக விஜய் சேதுபதி தற்சமயம் பாலிவுட்டிலும் வரவேற்பை பெற்றிருக்கிறார். அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியுள்ளன. தற்சமயம் மேரி கிறிஸ்மஸ் என்னும் பாலிவுட் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது எனவே பாலிவுட்டில் இது நல்ல வெற்றியை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது பாலிவுட்டின் பிரபல கதாநாயகியான கேத்தரினா கைஃப் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதியிடம் ஒரு பேட்டியில் பாலிவுட் தொகுப்பாளர் கேட்கும் பொழுது கடினமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் பொழுது உங்களுக்கு பயமாக இல்லையா என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி கூறும் பொழுது எனது மனைவியை நான் சமூக வலைதளங்கள் வழியாக தான் அறிந்திருந்தேன்.
அவரிடம் ஐந்து மாதங்கள்தான் பேசியிருப்பேன் காதலிக்கிறேன் என்று கூட கூறவில்லை நேரடியாக திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டு விட்டேன். வாழ்க்கையின் மிகவும் யோசித்து எடுக்க வேண்டிய முடிவையே நான் பெரிதாக பயப்படாமல் எடுத்து விட்டேன். அப்படி இருக்கும் பொழுது படங்களில் நடிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதற்கு பெரிதாக எதற்கு பயப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அதனை கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் அசந்து போய் இருக்கின்றனர் இப்படியாக தமிழ் சினிமாவில் இருந்து சென்று பாலிவுட்டில் மாஸ் காட்டியுள்ளார் விஜய் சேதுபதி.
