சிறப்பான கதையா இருக்கே.. வெளியான தலைவன் தலைவி பட ட்ரைலர்..! இதை கவனிச்சீங்களா?
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. இந்த படத்தின் கதையை முதலில் ஜெயம் ரவிக்கு சொன்னதாகவும் ஆனால் அதற்கு கதை கை மாறி இப்போது விஜய் சேதுபதி நடித்து வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதைப்படி விஜய் சேதுபதி ஒரு பரோட்டா மாஸ்டராக இருக்கிறார். அவர் போடும் பரோட்டாவிற்கு அதிக வரவேற்புகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரை திருமணம் செய்கிறார் நித்யா மேனன். பெண் பார்க்கும் சமயத்திலேயே இருவருக்கும் பிடித்து விடுகிறது.
அதற்கு பிறகு அவர்கள் இருவருக்கும் நடக்கும் விஷயங்களே படத்தின் கதையாக இருக்கிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பு என்னதான் காதல் வாழ்க்கை சுமூகமாக இருந்தாலும் அதற்கு பிறகு பெரும் சண்டையாகதான் இருக்கும்.
அப்படியாக இவர்கள் இருவருக்குள்ளும் கூட சண்டையாகவே கதைக்களம் செல்கிறது. அதை முடிந்த அளவில் காமெடியாக செய்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகிற ஜூலை 25 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கு இப்போது வரவேற்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.