Connect with us

நீ என்ன புரிஞ்சிக்கல விக்கி!.. நயன்தாரா கணவரோடு விஜய் சேதுபதிக்கு வந்த மோதல்?.

viajy sethupathi vignesh shivan

News

நீ என்ன புரிஞ்சிக்கல விக்கி!.. நயன்தாரா கணவரோடு விஜய் சேதுபதிக்கு வந்த மோதல்?.

Social Media Bar

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து திரைப்படங்களை நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி.

தொடர்ந்து ஒரு நடிகருக்கு மார்க்கெட் என்பது அதிகரித்து வருகிறது என்றால் அது விஜய் சேதுபதியாகதான் இருக்கும். சிவகார்த்திகேயனுக்கு கூட ஒரு திரைப்படம் தோல்வியை கொடுத்து விட்டால் பிறகு அவரது மார்க்கெட்டில் அது ஒரு இறக்கத்தை ஏற்படுத்திவிடும்.

உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான அயலான் திரைப்படம் தோல்வியடைந்தது. இதனால் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்புகள் குறைந்துவிட்டது.

விஜய் சேதுபதி:

ஆனால் விஜய் சேதுபதியை பொறுத்தவரை அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் அவருடைய திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது கூடிக்கொண்டேதான் போகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி இனிமேல் நான் வில்லனாகவே நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். மேலும் அவர் ஏதாவது ஒரு திரைப்படங்களில் சின்ன கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்றால் கூட நடிக்க மாட்டேன்.

vijay-sethupathi-2
vijay-sethupathi-2

ஒன்லி கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பது என்று முடிவு எடுத்து விட்டார் விஜய் சேதுபதி. ஏனெனில் இப்பொழுதெல்லாம் அதிகமாக வில்லனாக நடிப்பதற்கும் சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு முன்னால் வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் விஜய் சேதுபதி கடுப்பாகி இந்த விஷயத்தை எல்லாம் நிராகரித்து வருகிறார். இந்த நிலையில் நானும் ரவுடிதான் குறித்து ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்து இருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி இணைந்து நடித்த திரைப்படம் நானும் ரவுடிதான்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த பொழுதுதான் விஜய் சேதுபதி நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை விக்னேஷ் சிவன் சொன்னபொழுது அது விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.

நானும் ரவுடிதான் பட அனுபவம்:

தொடர்ந்து அந்த திரைப்படத்தில் நடித்தும் கொண்டிருந்தார். ஆனால் படப்பிடிப்பு நடிக்க துவங்கிய பிறகு விக்னேஷ் சிவன் எப்படி அந்த கதாபாத்திரத்தை விளக்கினாரோ அந்த மாதிரி அது திரைப்படத்தில் இல்லை.

vignesh shivan
vignesh shivan

அதனால் விஜய் சேதுபதிக்கு அது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனை அழைத்து நீ என்னை புரிஞ்சுக்கவே இல்ல நான் எப்படி நடிக்கணும் என்று நீ சொல்லிக் கொடுத்து கொண்டு இருக்கிறாய். நீ சொன்ன மாதிரி அந்த கதாபாத்திரம் வரவில்லை என்று கூறி அவரிடம் சண்டை செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.

ஏனெனில் படத்தின் படத்தில் அது ஒரு நகைச்சுவையான கதாபாத்திரம் அந்த கதாபாத்திரம் கண்ணீர் விட்டு அழுதால் அதை பார்த்து மக்கள் சிரிக்க வேண்டும் என்கிற வகையில் இருக்கும்.

அந்த கதாபாத்திரத்தை அப்படியே விக்னேஷ் சிவன் செய்யவில்லை என்று நினைத்தார் விஜய் சேதுபதி. ஆனால் படப்பிடிப்பெல்லாம் முடித்து படம் வெளியான பொழுது அந்த கதாபாத்திரம் மிக கஷ்டமாக இருந்தது என்று கூறப்படுகிறது.

To Top