Tamil Cinema News
8 நாட்களில் விடுதலை 2 படத்தின் வசூல்.. டோட்டல் டேமஜ் போல..!
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே வெளியான திரைப்படமாக விடுதலை 2 திரைப்படம் இருந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் அமையவில்லை.
முக்கியமாக திரைப்படத்தின் முக்கிய கதாநாயகனான சூரிக்கு இந்த திரைப்படத்தில் பெரிதாக எந்த காட்சிகளும் இல்லை என்று கூறப்படுகிறது. விடுதலை முதல் பாகத்தில் சூரிதான் முக்கிய கதாபாத்திரமாக இருந்தார்.
ஆனால் விடுதலை 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதிதான் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார் என்று பலரும் அறிந்த விஷயம் தான் என்றாலும் கூட சூரியின் கதாபாத்திரத்திற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்படியான காட்சிகள் இந்த திரைப்படத்தில் அமையவில்லை இந்த நிலையில் விடுதலை 2 திரைப்படத்தில் வசனங்களும் மிக அதிகமாக இருக்கிறது ஏதோ மாநாட்டுக்கு சென்றது போல தோன்றுகிறது என்று ரசிகர்கள் கூறினர்.
அதனை தொடர்ந்து விடுதலை 2 திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது குறைந்தது. படம் வெளியாகி எட்டு நாட்கள் நிறைவடைந்த நிலையில் மொத்தமாகவே இந்த திரைப்படம் 48 கோடிதான் வசூல் செய்து இருக்கிறது.
படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும்பொழுது இது மிகக் குறைந்த அளவிலான வசூல் என்று கூறப்படுகிறது. ஓடிடி விற்பனை மற்றும் சேட்டிலைட் விற்பனை மூலமாக சம்பாதிக்கும் தொகையை கணக்கிட்டால் கூட படத்திற்கு பெரிய லாபம் என்று எதுவும் வராது என்று கூறப்படுகிறது.