இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அதிக வரவேற்புக்கு நடுவே தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் விடுதலை 2. விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கே நல்ல வரவேற்பு இருந்தது.
அதனை தொடர்ந்து இப்பொழுது விடுதலை 2 திரைப்படம் வெளியாகி இருக்கிறது. விடுதலை 2 திரைப்படத்தை பொருத்தவரை இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிதான் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார்.
அவரது பழைய கால கதைகளும் வருகின்றன. ஏற்கனவே நிறைய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட விடுதலை 2 திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
விடுதலை 2 திரைப்படம்:

இந்த நிலையில் தற்சமயம் திரையில் வெளியாகியிருக்கும் விடுதலை 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மக்கள் படம் குறித்து கூறும் பொழுது விருதுகளுக்கு தகுதியான ஒரு திரைப்படமாக விடுதலை 2 இருக்கிறது.
விஜய் சேதுபதியின் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது என்று கூறி இருக்கின்றனர். அதிகபட்சம் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் தான் வந்த வண்ணம் இருக்கிறது எனவே இந்த திரைப்படம் கண்டிப்பாக அதிக வசூலை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.