Cinema History
எனக்கு முதல் வாய்ப்பு வாங்கி தந்தவரே விஜய் சேதுபதிதான்! – உண்மையை கூறிய விமல்!
தமிழ் சினிமாவில் நடிகர் விமல், விஜய் சேதுபதி எல்லாம் ஒரே காலக்கட்டத்தில்தான் சினிமாவில் கதாநாயகன் ஆவதற்காக வாய்ப்பு தேடி வந்தனர்.
விஜய் சேதுபதி, விமல் இருவருமே நிறைய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகே திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றனர். நடிகர் விமலுக்கு திரைத்துறையில் வளர்வதற்கு முதல் வாய்ப்பாய் அமைந்த திரைப்படம் பசங்க.
பசங்க படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இல்லாவிட்டாலும் மக்களால் ரசிக்கப்படும் ஒரு கதாபாத்திரமாக விமல் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தை தொடர்ந்துதான் களவாணி திரைப்படத்தில் விமலுக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பிறகு அதை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்பை பெற்றார் விமல். ஆனால் பசங்க படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு ஆட்களை எடுத்துக்கொண்டிருந்தபோது அந்த விஷயத்தை விமலிடம் கூறி அவரை பரிந்துரைத்தது நடிகர் விஜய் சேதுபதி.
இயக்குனர் பாண்டிராஜுற்கு பசங்க திரைப்படம்தான் முதல் படம். அந்த படத்தில் இந்த கதாபாத்திரம் பற்றிய செய்தி முதலில் விஜய் சேதுபதிக்குதான் வந்துள்ளது. உடனே விமலை தொடர்பு கொண்ட விஜய் சேதுபதி இந்த கதாபாத்திரம் உனக்கு சிறப்பாக இருக்கும் உடனே இயக்குனரை போய் பார் என கூறியுள்ளார்.
விமல் அப்போது முகத்தில் சவரம் செய்து அடையாளமே தெரியாமல் இருந்தார். அவரை பார்த்த பாண்டிராஜ் இவர் அந்த கதாபாத்திரத்திற்கு செட் ஆக மாட்டார் என முடிவு செய்துவிட்டார். அப்போதுதான் விமல் நடித்த பழைய விளம்பரம் ஒன்றின் வீடியோவை விஜய் சேதுபதி பாண்டிராஜிடம் காட்டி உள்ளார். அதை பார்த்ததும் விமலை படத்தில் சேர்த்து கொண்டார் பாண்டிராஜ்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்