Connect with us

இந்த கொடிக்கு என்ன அர்த்தம் தெரியுமா? கொடியை ஏற்றி விஜய் கொடுத்த முதல் ஸ்பீச்!.

Vijay TVK

News

இந்த கொடிக்கு என்ன அர்த்தம் தெரியுமா? கொடியை ஏற்றி விஜய் கொடுத்த முதல் ஸ்பீச்!.

Social Media Bar

தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக நடிகர் விஜய் தொடங்கிய கட்சி கொடி பற்றியும், அவரின் பாடல் பற்றியும் மக்கள் தேட தொடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் பனையூரில் தன்னுடைய அலுவலகத்தில் கட்சிக்கொடியை அறிமுகம் செய்து வைத்து பேசிய நடிகர் விஜய், அந்த கட்சி கொடியின் அர்த்தம் பற்றியும், கட்சி கொடி அறிமுகம் செய்த பிறகு அவரின் முதல் அதிரடி பேச்சையும் மேடையில் பேசி இருக்கிறார் தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில் தான் இறுதியாக 2 படங்கள் மட்டும் நடித்துவிட்டு பிறகு முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்கப் போவதாக அறிவிப்பு ஒன்று வெளியிட்டு இருந்தார்.

vijay

அது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அரசியல் வட்டத்திலும் பேசு பொருளாக அமைந்தது. நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. இருந்தாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ள விஜய் அரசியலுக்கு வருவது என்பது அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்படாத ஒன்றாக இருந்தது.

இந்நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை தான் எதிர்கொள்ள இருப்பதாகவும், அதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு எனவும் கூறினார். மேலும் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த விஜய் கட்சியின் பொதுச் செயலாளரையும் அறிமுகப்படுத்தினார்.

கட்சியின் வேலைகளில் களமிறங்கிய விஜய் தற்போது தன்னுடைய பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்து கட்சியின் பாடலையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

கட்சி கொடி அறிமுகம் செய்து வைத்த பின் பேசிய விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது பேசிய அவர் நாம் அனைவரும் எதிர்பார்த்த முக்கியமான நாள் இது என்று எனக்கு தெரியும். மேலும் நாம் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அதன் தொடக்கப் புள்ளியாக கட்சிக்கொடியை அறிமுகம் செய்திருக்கிறோம் எனவும், கட்சியின் பெயரை பிப்ரவரி மாதத்தில் அறிவித்ததில் இருந்து அனைவரும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்கு தெரியும் என கூறிய விஜய், கட்சியின் முதல் மாநில மாநாடு நிச்சயம் அதை விரைவில் அறிவிப்பேன் என விஜய் கூறியிருக்கிறார்.

vijay

இனி நாம் நமக்காக உழைத்தோம். இனி தமிழ்நாட்டின் நலனுக்காக உழைக்கப் போகிறோம் எனக் கூறிய விஜய், “புயலுக்கு பின் அமைதி இருப்பது போல இந்த கட்சிக் கொடிக்கு பின்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது” அதை அனைவரும் எதிர்பார்த்த அந்த முக்கியமான நாளில் தான் நிச்சயம் கூறுவேன் என விஜய் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறும் பொழுது ஒரு கட்சியின் கொடியாக மட்டும் நான் இதை பார்க்காமல், தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக்கான கொடியாகவும் தான் பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் அந்த முக்கியமான நாளில் நாம் சந்திப்போம்.. வெற்றி நமக்கு.. எனக் கூறி விஜய் பேசியிருப்பது அவரின் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Articles

parle g
madampatty rangaraj
To Top