News
பெண்களை இழிவுப்படுத்தி விஜய் பேசியிருக்க கூடாது!.. இதெல்லாம் ரொம்ப தப்பு.. குவியும் எதிர்ப்புகள்.
லியோ படத்தின் டிரைலருக்காக தமிழ் சினிமா ரசிகர்கள் வெகுவாக காத்திருந்தனர். ஆனால் படத்தின் டிரைலர் ரசிகர்களின் அனுமானங்களை தாண்டி புதிய வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் மொத்தம் இரண்டு விஜய் இருக்கலாம் அல்லது ஒரு விஜயே இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
எப்படி இருந்தாலும் படம் முழுக்க முழுக்க காஷ்மீரிலேயே நடக்கிறது என தெரிகிறது. இந்த நிலையில் பல்வேறு கோணங்களில் விஜய்யின் லியோ திரைப்பட ட்ரெய்லர் பேசு பொருளாகி உள்ளது. ஒவ்வொரு திரைப்படத்திலும் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்துகிறார் என்று ஒரு வாதம் ஏற்கனவே இருந்தது.
மாநகரம் திரைப்படத்தில் இந்த மாதிரியான கெட்ட வார்த்தைகளுக்கு எதிராக பேசியிருக்கும் அதே லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தனது திரைப்படத்தில் இப்படியான வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தில் இடைவெளி நேரத்தில் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போன்ற காட்சி இருக்கும்.
விக்ரம் திரைப்படத்திலும் கமல்ஹாசனுக்கு அதை போன்ற வார்த்தை வைக்கப்பட்டிருந்தது தொடர்ந்து தனது திரைப்படங்களில் லோகேஷ் இதை செய்து வருகிறார். அதேபோல தற்சமயம் டிரைலரிலேயே இந்த படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தையை விஜய் பேசுவது போல இருக்கிறது. இதற்கு விஜய்யும் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை என்று தெரிகிறது எனவே இது மிகவும் தவறு என்று ஒரு சாரார் பேசி வருகின்றனர்.
