Tamil Cinema News
வேட்டையன் பார்த்துட்டு விஜய் சொன்ன அந்த வார்த்தை?.. உண்மையை கூறிய வெங்கட் பிரபு.!
இதுவரை தமிழில் வந்த பெரிய நடிகர்களின் போலீஸ் திரைப்படங்களில் மாறுபட்ட திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் அமைந்திருக்கிறது. பொதுவாக போலீஸ்கள் செய்யும் என்கவுண்டர் போன்ற விஷயங்களை ஒரு மாஸான விஷயமாகதான் படங்களில் காட்டி வந்துள்ளனர்.
அது தவறு என்று கதாநாயகனே ஒப்புக்கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது வேட்டையன் படத்தின் கதை. இதனால் வேட்டையன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வேட்டையன் படத்தின் மொத்த பட்ஜெட் 250 கோடி ஆகும்.
அதில் முதல் நாளே 80 கோடியை வசூல் செய்திருக்கிறது வேட்டையன் திரைப்படம் அது இல்லாமல் ஓடிடி உரிமம். சேட்டிலைட் உரிமம் போன்றவற்றை சேர்க்கும் பொழுது ஏற்கனவே படத்தில் போட்ட காசு கிடைத்துவிட்டது என்று கூறப்படுகிறது.
வேட்டையன் படம் குறித்து விஜய்:
இனிமேல் படத்தில் லாபம் வர வேண்டியதுதான் பாக்கி. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தை பார்ப்பதற்கு பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர். அந்த வகையில் வெங்கட் பிரபுவும் விஜய்யும் சேர்ந்து வேட்டையன் திரைப்படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்கு வந்திருந்தனர்.
வேட்டையன் திரைப்படம் குறித்து விஜய் உங்களிடம் என்ன கூறினார் என்று வெங்கட் பிரபுவிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு நாங்கள் ரொம்ப என்ஜாய் பண்ணி அந்த திரைப்படத்தை பார்த்தோம்.
விஜய்க்கு ரொம்ப பிடித்திருந்தது எப்போதுமே நாங்கள் தலைவர் ரசிகர் தானே என்று வெளிப்படையாக கூறியிருந்தார் வெங்கட் பிரபு. விஜய் தலைவர் ரசிகராக இருந்தாலும் விஜய்யின் ரசிகர்கள் எப்பொழுதும் ரஜினியை கேலி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று இதற்கு ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
