Connect with us

சென்சார் விதியை மீறிய தளபதி 69.. மாநாடு முடிஞ்சதுமே பிரச்சனை ஆரம்பிச்சிட்டு போல..!

vijay thalapathy 69

Tamil Cinema News

சென்சார் விதியை மீறிய தளபதி 69.. மாநாடு முடிஞ்சதுமே பிரச்சனை ஆரம்பிச்சிட்டு போல..!

Social Media Bar

Thalapathy 69 is Vijay’s upcoming film after the T.V.K conference. This film is currently facing some problems from the Censor Board.

எப்போதுமே நடிகர் விஜய் அரசியல் சார்ந்து பேசும்போதெல்லாம் அவருக்கு அது தொடர்பான பிரச்சனைகள் என்பது அதிகமாக வந்து கொண்டு இருக்கின்றன.

இது கடந்த 10 வருடங்களாகவே விஜய்க்கு நடந்து வருகின்றன. அரசியல் ரீதியாக தனக்கு ஒரு பாதுகாப்பு அற்ற தன்மை இருக்கும் காரணத்தினால்தான் அவர் அரசியல் கட்சியே துவங்கினார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் உண்டு.

ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை:

அந்த அளவிற்கு அரசியல் சார்ந்து நிறைய பாதிப்புகளை சந்தித்து இருக்கிறார் விஜய். அரசியல் கட்சி துவங்கிய பிறகு அனைவருக்கும் திருப்பிக் கொடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் பேசி வருகின்றனர்.

இதற்கு நடுவே மாநாட்டுக்குப் பிறகு தளபதி 69 திரைப்படத்தின் வேலையில் ஈடுபட்டு வருகிறார் விஜய். ஏனெனில் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் இதுதான். எனவே இது மிக நன்றாக வரவேண்டும் என்பதில் விஜய் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து இப்பொழுது ஒரு புதிய பிரச்சனை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் விஜய்க்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தளபதி 69 படத்தில் வந்த பிரச்சனை:

இதற்காக ஒரு கட்சி கொடியும் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆனால் இந்த கட்சி கொடியின் நிறம் த.வெ.க கட்சியின் கொடி நிறத்தோடு ஒத்துப்போகிறது. தணிக்கை அமைப்பை பொருத்தவரை படத்தில் கட்சி கொடி காட்டப்படுகிறது என்றால் பல கட்சிகளின் கொடி ஒன்றாக காட்டப்பட்டால் பிரச்சனை இல்லை.

ஆனால் தனித்து ஒரு கட்சியின் கொடி காட்டப்படுகிறது என்றால் அது நிஜத்தில் இருக்கும் கட்சியின் கொடியாக இருக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் படத்தில் நிறைய இடத்தில் இந்த கட்சியின் கொடி வருவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இதனால் தணிக்கை குழுவில் பிரச்சனை வரும் என்பதால் அந்த கொடியின் நிறத்தை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் மாற்றுவதற்கான வேலைகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

To Top