News
அன்னைக்கி த்ரிஷா கூட இருந்தது விஜய்யா? அஜித்தா? மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. ரசிகர்கள் செய்த சம்பவம்..
நடிகை திரிஷாவும் விஜயும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை த்ரிஷா வெளியிட்டது முதலே அவர்கள் இருவருக்கும் இடையே என்ன உறவு இருந்து வருகிறது என்பது குறித்து இணையத்தில் நிறைய பேச்சுக்கள் வர துவங்கியிருக்கின்றன.
திரிஷாவும் விஜய்யும் தமிழில் நிறைய திரைப்படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்து இருக்கின்றனர். சமீபத்தில் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்தார்.
நெருக்கமான காட்சிகள்:
மேலும் நெருக்கமான காட்சிகளும் முத்த காட்சிகளும் கூட இவர்கள் இருவருக்கும் இருந்து வந்தது. ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்ததாக திருப்பாச்சி, ஆதி மாதிரியான திரைப்படங்கள் வந்த காலகட்டத்தில் பேச்சுக்கள் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்சமயம் மீண்டும் அந்த பேச்சுக்கள் தலை தூக்கியுள்ளன இதற்கு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா வெளியிட்ட புகைப்படங்களே காரணம் என்று கூறப்படுகிறது. திரிஷாவும் விஜய்யும் வெளிநாட்டில் ரகசியமாக சுற்றி வருகின்றனர் என்று பலரும் கூறும் வகையில் அந்த புகைப்படம் வெளியாகி இருந்தது.
அந்த புகைப்படத்தில் ஒரு லிப்டில் விஜய்யும் திரிஷாவும் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஒரு போட்டோ எடுத்திருந்தனர். அதைதான் வெளியிட்டு இருந்தார் திரிஷா. இந்த நிலையில் திரிஷா இதற்கு முன்பு வெளியிட்ட புகைப்படங்களை எல்லாம் எடுத்து ரசிகர்கள் அதை டீ கோட் செய்து வருகின்றனர்.
புகைப்படத்தால் வந்த பிரச்சனை:
அதில் ஒரு புகைப்படத்தில் த்ரிஷா ஃபோட்டோ எடுக்கும் பொழுது அவரை ஃபோட்டோ எடுக்கும் நபர் வெள்ளை, கருப்பு கலர் ஷூ ஒன்று அணிந்து அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. அந்த புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட ரசிகர்கள் இந்த ஷூ யாருடையது என்று கேட்டு பதிவிட்டு இருந்தனர்.

பிறகு அதே ஷூவை விஜய் அணிந்து கொண்டு செல்லும் புகைப்படம் உண்டு. தொடர்ந்து விஜய்யுடன் இவர் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று பேசி வந்தனர்.

ஆனால் இதற்கு நடுவில் வந்த தளபதி ரசிகர்கள் அஜித்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அஜித்தும் அதே மாடல் ஷூ ஒன்றை அணிந்திருக்கிறார் இப்பொழுது கூறுங்கள் த்ரிஷாவின் கூட இருந்தது அஜித்தா அல்லது விஜயா என்று ஒரு பெரும் கேள்வியை எழுப்பி இருக்கின்றனர்.
