Connect with us

இனி விஜய் டிவியில் குக் வித் கோமாளி வருவதே கஷ்டம்!.. இயக்குனரே கட்சி தாவுனா என்ன பண்றது!..

top cook dupe cook

News

இனி விஜய் டிவியில் குக் வித் கோமாளி வருவதே கஷ்டம்!.. இயக்குனரே கட்சி தாவுனா என்ன பண்றது!..

Social Media Bar

விஜய் டிவியில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங்கை கொண்ட நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. குக் வித் கோமாளி முதல் சீசன் வந்தப்போது அதற்கு அவ்வளவாக வரவேற்புகள் இல்லை என்றே கூற வேண்டும்.

ஆனால் இரண்டாவது சீசன் துவங்கியப்போது தமிழகம் முழுவதும் பலரின் விருப்பமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது. புகழ், மணிமேகலை, பாலா, சிவாங்கி போன்றோரின் நகைச்சுவை பலருக்கும் பிடித்தமானதாக இருந்து வந்தது.

வெற்றிக்கரமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடைந்த 24 ஆம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் கலந்துக்கொள்ளவில்லை. அவர் சன் டிவியில் குக் வித் கோமாளி போலவே நடத்தப்படும் டாப் குக் டூப் குக்  என்கிற நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார்.

top cook dub cook
top cook dub cook

இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் இரண்டாம் நடுவராக நடிகர் வடிவேலு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. வடிவேலு வரும் பட்சத்தில் அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தயாரிப்பில் பணிப்புரிந்த பலரும் கூட தற்சமயம் சன் டிவிக்கு போய்விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஐந்தாவது சீசன் துவங்கியது முதலே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது விஜய் டிவி. இப்படியே போகும் நிலையில் குக் வித் கோமாளியை தொடர்வது கஷ்டம் என கூறப்படுகிறது.

ஆனால் எப்படி இருந்தாலும் விஜய் டிவி அந்த நிகழ்ச்சியை கை விடுவதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் வடிவேலுவை கொண்டு வந்தது போல விஜய் டிவியும் ஏதாவது ஒரு பிரபலத்திடம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Top