News
பெரிய சொகுசு காரை வாங்கிய மதுரை முத்து!.. விலை எவ்வளவு தெரியுமா? பெரும் சம்பாத்தியம் போல!.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான பிரபலங்களில் மதுரை முத்துவும் முக்கியமானவர். கலக்கப்போவது யாரு தொடர் விஜய் டிவியில் துவங்கிய காலக்கட்டத்திலேயே ஸ்டாண்ட் அப் காமெடியனாக அதில் அறிமுகமானார் மதுரை முத்து.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிப்பரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். அதன் பிறகு மதுரை முத்து மிகவும் பிரபலமானார். ஊர் திருவிழாக்களில் எல்லாம் மதுரை முத்துவின் காமெடி பட்டிமன்றங்களும், நகைச்சுவை நிகழ்ச்சிகளும் அதிகமாக நடக்க துவங்கின.

இந்த நிலையில் இன்னமும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகிறார் மதுரை முத்து. இவற்றையெல்லாம் வைத்தே வீடு கட்டி செட்டில் ஆகிவிட்டார் மதுரை முத்து. இதற்கு நடுவே தற்சமயம் அவர் கார் ஒன்று வாங்கியுள்ளார்.
innova zx hybrid என்கிற சொகுசு காரை மதுரை முத்து வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 34 லட்சம் என கூறப்படுகிறது. 34 லட்சத்திற்கு கார் வாங்குகிறார் என்றால் மதுரை முத்துவின் மாத சம்பளம் எத்தனை லட்சமாக இருக்கும் என்பதே மக்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த காரின் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மதுரை முத்து.
