Connect with us

புண்பட்ட மனதை தேத்தி விடுறீங்களா?. பிரதீப்பிற்கு விஜய் டிவி செய்த செயல்!..

vijay tv pradeep

News

புண்பட்ட மனதை தேத்தி விடுறீங்களா?. பிரதீப்பிற்கு விஜய் டிவி செய்த செயல்!..

Social Media Bar

Bigboss Pradeep : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதியாக வந்த சீசன் ஓரளவு வரவேற்பு பெற்றது என்றே கூற வேண்டும். ஆனால் அது ஆரம்பித்த சமயத்தில் மாயா உருவாக்கிய ஒரு குழுவின் காரணமாக எக்கச்சக்கமான சர்ச்சைகளுக்கு உள்ளானது.

சொல்ல போனால் பிக்பாஸில் அர்ச்சனா வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மாயாதான். அர்ச்சனா உள்ளே வந்த பொழுது அவரை தொடர்ந்து மாயாவின் கும்பல் கேலி செய்து மக்களுக்கு அர்ச்சனா மீது இரக்கம் வரும் வகையில் செய்துவிட்டனர்.

pradeep
pradeep

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை அந்த இரக்கம் என்பது மக்களை விட்டு போகவே இல்லை. அதுவே அர்ச்சனாவையும் ஜெயிக்க வைத்தது. இந்த நிலையில் மாயாவின் குழு செய்த முக்கியமான பெரிய விஷயம் என்றால் அது பிரதீப்பிற்கு செய்த வேலைதான்.

பிரதீப் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று பலரும் கை தூக்கினர். இதனை அடுத்து அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக்கினார் கமல்ஹாசன்.

இதனால் மக்கள் அதிகமாக அதிருப்தி அடைந்தனர் தொடர்ந்து கமலஹாசனையும் விஜய் டிவியையும் விமர்சித்து வந்தனர் இப்போது வரை கமல்ஹாசனின் அந்த முடிவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று பிரதீப்பின் பிறந்தநாள்.

அதனை ஒட்டி விஜய் டிவி தன்னுடைய பங்குக்கு அவருக்கு மலர் கொத்து ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறது. இதனை வைத்து பார்க்கும் பொழுது அடுத்து விஜய் டிவி நிகழ்த்தும் நிகழ்ச்சிகளில் பிரதீப் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

To Top