Actress
ஓ இதுதான் படத்தின் கதையா! – எதிர்பார்ப்பை தூண்டும் வாரிசு போட்டோக்கள்
தமிழின் முண்ணனி நடிகர் விஜய் நடித்து வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு கதாநாயகி ராஷ்மிகா மண்டனா நடிக்கிறார்.

இந்த படம் ஒரு குடும்ப கதை என கூறப்படுகிறது. இதனால் சிறுத்தை சிவாவின் அண்ணாத்த, விஸ்வாசம் மாதிரியான கதைகளமாக இருக்கலாம் என்று பலரும் பலவாறாக யோசித்த நிலையில் படத்தின் புதிய போஸ்டர்கள் பல விஷயங்களை நமக்கு தெளிவுப்படுத்தியுள்ளன.

போஸ்டர்களை பார்த்தவரை குடும்ப கதை என்றாலும் கூட படம் கிராமத்தில் நடக்கும் கதை போல தெரியவில்லை.

நகரத்தில்தான் கதை செல்கிறது. படத்தில் விஜய் கோர்ட் எல்லாம் போட்டுக்கொண்டு பிசினஸ் மேன் போல் இருப்பதை பார்த்தால் அவர் ஒரு கார்ப்பரேட் ஹீரோவாக இருக்க கூடும் என கூறப்படுகிறது.

வாரிசே இல்லாமல் அழிவை காண இருக்கும் ஒரு கார்ப்பரெட் நிறுவனத்தின் வாரிசாக விஜய் வரலாம் என பல அனுமானங்கள் இருந்து வருகின்றன.

தற்சமயம் வெளியாகியிருக்கும் இந்த புகைப்படங்கள் யாவும் ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.


