News
நீயா நானாவில் பேசிய பையனுக்கு உதவி செய்ய முன் வந்த தளபதி!.. ஆனந்த கண்ணீர் வடிக்கும் குடும்பம்!.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தனது சினிமா வாழ்க்கையை நிறுத்திவிட்டு முழு நேர அரசியல்வாதியாக களம் காண போகிறார் என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான்.
சமீபத்தில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி மற்றும் கட்சியின் பாடலை அறிமுகம் செய்து வைத்த விஜய், இனி முதல் மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்து வருகிறது.
இவர் கடந்த சில வருடங்களாக கல்வியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். தற்போது நடிகர் விஜய் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு மாணவனுக்கு உதவியிருக்கும் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நீயா நானா நிகழ்ச்சி
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக இருப்பது நீயா நானா நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் மூலம் சமூகத்தில் நிலவும் பல பிரச்சினைகள், குடும்பத்தில் உருவாகும் பிரச்சனைகள் மற்றும் பல நிகழ்வுகளை டாப்பிக்காக எடுத்து இரு தரப்பினர் பேசுவார்கள்.
வாரம் வாரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் பல சுவாரசியமான சம்பவங்களும் நடக்கும். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நீயா நானா நிகழ்ச்சியில் சமீபத்திய எபிசோட் நேற்று ஒளிபரப்பானது. இதில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் மாணவர்களை வைத்தும் அவர்களின் பெற்றோர்களை வைத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அந்த எபிசோட் வெளியானது முதல் சமூக வலைத்தளங்களில் அந்த மாணவர்கள் படும் கஷ்டம் என அனைத்தும் வீடியோவாக வெளிவந்து வைரலானது. அதில் ஒரு மாணவன் பேசியது தற்போது அனைவரின் நெஞ்சங்களையும் உருக்கும் விதத்தில் இருந்தது.
அதில் பேசிய ஒரு மாணவன் தான் மூட்டை தூக்கி வேலை பார்ப்பதாகவும், பல சமயங்களில் பஸ் இல்லை என்றால் மூன்று கிலோ மீட்டர் வீட்டிற்கு நடந்தே செல்வேன் என்றும் அவர் கூறியிருந்தார். அவர் முட்டை தூக்கும் போது தோள்பட்டையில் வைத்து தூக்குவேன் எனக்கு மிகவும் வலியாக இருக்கும். ஆனால் அம்மா கஷ்டப்படக்கூடாது என்பதற்காக நான் மூட்டை தூக்குறேன் என கூறினார்.
கோபிநாத் நடந்து போகும் போது என்ன யோசிப்பீங்க.. என கேட்டார். அதற்கு அந்த மாணவன் என் அம்மாவை நல்ல இடத்தில் வைக்க வேண்டும். என் அம்மாவிற்கு சீக்கிரம் மெத்தை வாங்கி கொடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இவர் பேசியது அனைவரின் மனதையும் உருக்கியது என்று தான் கூற வேண்டும்.
மாணவனுக்கு உதவிய விஜய்
இந்நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு அந்த மாணவன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து இந்த வீடியோவை பார்த்த விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக அந்த மாணவனுக்கு உதவி இருக்கிறார். இதைப் பற்றி அவர் தாயார் கூறும்போது எங்கள் வீட்டிற்கு தேவையான ஒரு மாதத்திற்கு மளிகை பொருட்களை வாங்கி கொடுத்திருக்கிறார்.

மெத்தை வாங்கி கொடுத்திருக்கிறார். மேலும் எங்களுடைய வங்கிக் கணக்கில் ரூபாய் 25,000 செலுத்தப்பட்டிருக்கிறது. என் பையனின் கல்லூரி செலவை முழுவதும் விஜய் பார்த்துக் கொள்வதாகவும் அந்த மாணவனின் தாய் பேசிய வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த உதவிகளை விஜய்யின் சார்பாக த.வெ.க கட்சியின் செயலாளர் புஸ்லி ஆனந்த் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
