News
Vijayakanth: ஏண்டா அந்த மனுசனை கொடுமைப்படுத்துறீங்க!.. விஜயகாந்த் நிலையை பார்த்து மனம் குமுறும் நெட்டிசன்கள்!.
Vijayakanth: சினிமா துறையில் உள்ள பிரமுகர்கள் மனதில் மட்டுமின்றி மக்கள் மனதிலும் நல்ல இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். ஒரு நடிகராக விஜயகாந்த் சினிமாவில் பெரும் வெற்றிகளை கொடுத்திருக்கிறார். அவருடைய இளமை காலங்களில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.
வயதான பிறகும் கூட ரமணா, தர்மபுரி, பேரரசு, சொக்கத்தங்கம் என்று வரிசையாக வெற்றி படங்களை மட்டுமே நடித்து வந்தார் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிப்பால் கஷ்டப்பட்டு வருகிறார் விஜயகாந்த்.
தற்சமயம் அவருக்கு நுரையீரல் ரீதியான பிரச்சனை ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் போன வாரம் விஜயகாந்த் சரியாகி விட்டார் என்று கூறியிருந்தனர். சமீபத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
இந்த நிலையில் எப்படா என்று காத்திருந்தது போல தேமுதிக கட்சியின் பொதுக்கூட்டத்தை இன்று நடத்தியுள்ளனர். தற்சமயம் தேமுதிகவின் பொதுச்செயலாளராக நடிகர் விஜயகாந்த் தான் இருந்து வருகிறார் எனவே அதிலிருந்து பிரேமலதா பொது செயலாளர் பதவிக்கு மாறியுள்ளார். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக விஜயகாந்த்தையும் அழைத்து வந்து அமர வைத்து அவரை ரசிகர்களிடம் கைகாட்டுமாறு கூறியுள்ளார் பிரேமலதா.

மிகவும் கஷ்டப்பட்டு விஜயகாந்த் கைகாட்டும் அந்த வீடியோவை பார்க்கும் நெடிசன்களுக்கு மன வருத்தம் உண்டாகி உள்ளது. இது குறித்து அவர்கள் கூறும் பொழுது எதற்காக உடல்நிலை குன்றிய இந்த மனிதரை இவ்வளவு கஷ்டப்படுத்துகிறீர்கள் இதற்கு ஒரு விழா நடத்தியாக வேண்டுமா ஒரு அறிக்கை மட்டும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தால் போதுமே என்று விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
